அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடியான Nordstrom கடைக்குள் 80 நபர்கள் முகமுடி அணிந்து வந்து கொள்ளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் நார்ட்ஸ்ட்ரோம் (Nordstrom) என்ற பல்பொருள் அங்காடி அமைந்துள்ளது. வால்நட் கிரீக் பகுதியில் உள்ள அந்தக் கடையில் சனிக்கிழமை இரவு 25 கார்களில் முகமுடி அணிந்த 80 நபர்கள் வந்துள்ளனர். கைகளில் ஆயுதங்களுடன் நார்ட்ஸ்ட்ரோம் அங்காடிக்குள் நுழைந்த அவர்கள், கைகளில் கிடைத்த பொருட்களை எல்லாம் கொள்ளை அடித்தனர்.
பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் காரில் தப்பி சென்றனர். அப்போது 3 பேரை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இதுதொடா்பாக என்பிசி பே நிருபர் ஜோடி ஹெர்னாண்டஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில், முகமுடி அணிந்த நபர்கள் கைகளில் பை, பெட்டி போன்றவற்றுடன் தப்பிச் செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அண்டை கடைக்காரர்கள், உடனடியாக தங்கள் கடைகளை பூட்டிக்கொண்டனர். இந்த கொள்ளை சம்பவம் நிகழ்வதற்கு ஒருநாள் முன்பாக சான்பிரான்சிஸ்கோவின் யூனியன் சதுக்கம் பகுதியில் உள்ள ஏராளமான கடைகளுக்குள் இதேபோல் கும்பல் கொள்ளை சம்பவம் அரங்கேறியிருந்தது.
இதையும் படிங்க: சீமான் ஆமைக்கறி சொல்வதுபோல இவரும் பேசுகிறார்- இலங்கை எம்.பியின் காட்டமான விமர்சனம்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.