முகப்பு /செய்தி /உலகம் / புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து .. ஆபத்தான நிலையில் சிகிச்சை

புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து .. ஆபத்தான நிலையில் சிகிச்சை

புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்தி மீது கத்திகுத்து தாக்குதல்

புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்தி மீது கத்திகுத்து தாக்குதல்

இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட நபரின் பெயர் ஹாதி மாடார் எனவும் அவரின் வயது 24 எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற போது, அவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஒரு மர்ம நபர் திடீரென மேடையேறி வந்து அங்கிருந்த சல்மான் ருஷ்தியின் கழுத்து மற்றும் உடல் முழுவதும் பலமுறை கத்தியால் குத்தியுள்ளார். அந்த நபரை உடனடியாக காவல்துறை சுற்று வளைத்து பிடித்தது.

கொலைவெறி தாக்குதலால் சரிந்து கீழே விழுந்த சல்மான் ருஷ்தியை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.சல்மான் ருஷ்டியின் தற்போதைய உடல்நிலை குறித்து அவரது உதவியாளர் ஆண்ட்ரூ வெய்லி தகவல் வெளியிட்டுள்ளார். சல்மான் ருஷ்தி ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவரின் கல்லீரல் தாக்குதல் காரணமாக மீக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளதாகவும், இந்த தாக்குதல் காரணமாக அவர் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் வென்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட நபரின் பெயர் ஹாதி மாடார் எனவும் அவரின் வயது24 எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. காஷ்மீரி முஸ்லீமான எழுத்தாளர் சல்மான் ருஷ்தி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர். 1988ஆம் ஆண்டில் அவர் எழுதிய சாத்தானின் வேதங்கள் என்ற புத்தகம் உலக அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளுக்கு எதிராக இந்த புத்தகம் இருப்பதாக கூறி ஈரான் உள்ளிட்ட நாடுகள் சல்மான் ருஷ்திக்கு பட்வா எனப்படும் மரண தண்டனை விதித்தது. இதையடுத்து இந்தியாவை விட்டு வெளியேறி 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார் சல்மான் ருஷ்தி. சல்மான் ருஷ்தி மீதான இந்த கொலைவெறி தாக்குதலுக்கு அவரின் எழுத்துக்களும், கருத்துக்களுமே காரணம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வரலாறு காணாத வறட்சியில் சிக்கி தவிக்கும் பிரிட்டன்.. புகழ்பெற்ற தேம்ஸ் நதி வறண்டது!

சல்மான் ருஷ்தி மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் முன்னாள் அதிபர் போரீஸ் ஜான்சன், எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், ஜாவேத் அக்தர் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 2016ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்ற ருஷ்தி, தற்போது நியூயார்க் நகரில் வசித்து வருகிறார்.

First published:

Tags: America, NewYork, Stabbed, Writer