முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவிய வூஹான் நகரம் இயல்பு நிலைக்கு திரும்பியது!
வூஹான் நகரத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு எண்ணிக்கை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களின் தினசரி தொற்றுநோய்களின் மிக மிக குறைந்த ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

மாதிரி படம்
- News18
- Last Updated: January 12, 2021, 4:04 PM IST
சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு, வூஹானில் பெயர் வைக்கப்படாத ஒரு புதிய வைரஸால் ஏற்பட்ட முதல் மரணத்தை சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சீனாவிலிருந்து படிப்படியாக கோவிட் -19 உலகம் முழுவதும் 1.9 மில்லியன் உயிர்களை இதுவரை கொன்றுள்ளது. கடந்த ஆண்டு முதன்முதலில் மத்திய சீன நகரமான வூஹானில் 11 மில்லியன் மக்கள் தொகையில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது, கடுமையான கட்டுப்பாடுகளுடன் வைரஸ் சீக்கிரமே கட்டுப்படுத்தப்பட்டு பின் வைரஸ் அகற்றப்பட்டது.
இப்போதும் வூஹானில் இங்கொன்றும் அங்கொன்றுமாக கொரோனா பாதிப்புகள் எழுகின்றது. ஆனால் மற்ற நாடுகளை விட வூஹான் நகரம் எவ்வளவோ பரவாயில்லை. அரசும், அதிகாரிகளும் கொரோனா பரவலுக்கு பலத்த கட்டுப்பாடுகளை விதித்து வைரஸை கட்டுப்படுத்தியுள்ளனர். பாதிப்புகள் மிக மிக குரைவாக உள்ளதால் வூஹானில் மக்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். பார்க்குகளிலும் ஆற்றங்கரையிலும் காதலர்கள் எவ்வித அச்சமும் இன்றி சுற்றிவருகின்றனர். ஆனால் இந்த நிலை ஒருவருடத்திற்கு முன்பு இப்படி இல்லை. கடந்த ஆண்டு ஜனவரி 11, ம் தேதி வெளியான ஒரு அறிக்கையில், அறியப்படாத வைரஸிலிருந்து (கொரோனா) சீனா தனது முதல் மரணத்தை உறுதிப்படுத்தியது.
எங்கு பார்த்தாலும் கூட்டம், துர்நாற்றம் வீசும் அருவெறுப்பான வூஹான் சந்தையில் 61 வயதான ஒரு நபர், நார்மலாக சுற்றி வந்துள்ளார். அந்த நபரைத் தான் கொரோனா முதலில் தாக்கியுள்ளது. மேலும் அவர் கோவிட் -19/கொரோனா வைரஸா ல் இறந்துள்ளார் என்று உலகம் தெரிந்துகொண்டது. வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் பெயர் உட்பட, எந்த தகவலும் முதலில் யாருக்கும் தெரியாது. அவரின் இறப்பிற்கு பின்பு பாதிப்பு தொடருமோ என்ற அச்சத்தில் அந்த வூஹான் சந்தை முற்றிலும் மூடப்பட்டது. இந்த தகவலை அரசும் அதிகாரிகளும் முதலில் மூடிமறைக்க முயன்றதாக பல சந்தேகங்கள் எழுந்தன. பல நாடுகள் சீனாவிற்கு ஒருவித அழுத்தத்தை மறைமுகமாகவும், நேரிடையாகவும் அளித்தது. இதுகுறித்து விசாரிக்க UNOன் ஸ்பெஷல் டீம் சீனாவிற்கு செல்ல திட்டமிட்டது, ஆனால இதற்கு பலமுறை சீன அனுமதி மறுத்தது. பல நீண்ட நாட்களுக்குப் பிறகு, சீனா திங்களன்று WHO இன் சுயாதீன வல்லுநர்கள் (Independent Experts) வியாழக்கிழமை முதல் வூஹானை பார்வையிடலாம் என்று கூறியது. UNO வின் சர்வதேச சமூகம் (international community) கொரோனா உருவான வூஹான் சந்தைக்குச் சென்று அங்கு வைரஸின் ஆரம்ப நாட்கள் எப்படி இருந்தது என்பதை பற்றி அலசி ஆராயும் என்று நம்பப்படுகிறது.
"வூஹான் இப்போது சீனாவின் பாதுகாப்பான நகரம், ஏன் உலகம் முழுவதும் கூட" என்று 66 வயதான சியோங் லியான்ஷெங் (Xiong Liansheng) திங்களன்று AFP இடம் கூறினார். பயணிகள் ஆற்றங்கரையில் உலா வருவதும் மற்றவர்கள் தங்களின் அன்றாட வேலைக்குத் திரும்புவதுமாக இருக்கின்றனர். வூஹானின் தற்போதைய நிலை மற்ற நாடுகளை விட முற்றிலும் மாறுபட்டது. உதாரணமாக சில நாடுகளில் இன்னமும் கடுமையான ஊரடங்குகளும் கட்டுப்பாடுகளும் உள்ளது. "தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த வூஹான் மக்களுக்கு விழிப்புணர்வு மிக அதிகம். என் இரண்டு வயது பேரன் கூட வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்துகொண்டுதான் செல்வான்" என்று சியோங் கூறினார்.
இப்போது "சீனாவில் பெரும்பாலான பாதிப்புகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன, கொரோனாவிற்கு எதிராக நம் நாடு ஒரு நல்ல கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது" என்று 80 வயதான ஜாங் கூறினார். "வூஹான் மக்கள் அனைவரும் நகரத்தில் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறார்கள், நாங்களும் இங்கு வந்து தினமும் மகிழ்ச்சியுடன் ஆடல் பாடலுடன் ஜமாய்க்கின்றோம்" என்றனர் அந்த தம்பதிகள். இந்த வைரஸை ஆரம்பத்தில் கையாண்டது குறித்து சீனா உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல விமர்சனங்களை எதிர்கொண்டது, Also read... ஒபாமாவின் இந்திய பயணம் - ரகசியங்களை உடைத்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிராணாப் முகர்ஜியின் புத்தகம்!
இதனிடையே குறைந்துகொண்டே வந்த கொரோனா தொற்று இப்போது மீண்டும் தலை காட்டுவதாக பலரும் எண்ணுகின்றனர். இந்த ஜனவரி திங்களன்று 103 புதிய கொரோனா தொற்றுநோய்களை மக்கள் புகாரளித்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இப்போது வரை மிக உயர்ந்த கொரோனா எண்ணிக்கையை வடக்கு ஹெபீ மாகாணம் (Northern Hebei province) ரிஜிஸ்டர் செய்துள்ளது. இந்த பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் முன்பைப்போல் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு ஸ்கூல்கள் மூடப்பட்டுள்ளன. வைரஸ் கட்டுப்பாடுகள் கடுமையாவதால் அடுத்த மாதம் நடைபெறவுள்ள லூனார் நியூ இயருக்கான (Lunar New Year) மக்களின் பயணத் திட்டங்கள் தடை செய்யப்படலாம் என்ற அச்சங்களும் அதிகரித்து வருகின்றன.
இப்போதும் கூட வூஹான் நகரத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு எண்ணிக்கை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களின் தினசரி தொற்றுநோய்களின் மிக மிக குறைந்த ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இப்போதும் வூஹானில் இங்கொன்றும் அங்கொன்றுமாக கொரோனா பாதிப்புகள் எழுகின்றது. ஆனால் மற்ற நாடுகளை விட வூஹான் நகரம் எவ்வளவோ பரவாயில்லை. அரசும், அதிகாரிகளும் கொரோனா பரவலுக்கு பலத்த கட்டுப்பாடுகளை விதித்து வைரஸை கட்டுப்படுத்தியுள்ளனர். பாதிப்புகள் மிக மிக குரைவாக உள்ளதால் வூஹானில் மக்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். பார்க்குகளிலும் ஆற்றங்கரையிலும் காதலர்கள் எவ்வித அச்சமும் இன்றி சுற்றிவருகின்றனர். ஆனால் இந்த நிலை ஒருவருடத்திற்கு முன்பு இப்படி இல்லை. கடந்த ஆண்டு ஜனவரி 11, ம் தேதி வெளியான ஒரு அறிக்கையில், அறியப்படாத வைரஸிலிருந்து (கொரோனா) சீனா தனது முதல் மரணத்தை உறுதிப்படுத்தியது.
எங்கு பார்த்தாலும் கூட்டம், துர்நாற்றம் வீசும் அருவெறுப்பான வூஹான் சந்தையில் 61 வயதான ஒரு நபர், நார்மலாக சுற்றி வந்துள்ளார். அந்த நபரைத் தான் கொரோனா முதலில் தாக்கியுள்ளது. மேலும் அவர் கோவிட் -19/கொரோனா வைரஸா ல் இறந்துள்ளார் என்று உலகம் தெரிந்துகொண்டது. வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் பெயர் உட்பட, எந்த தகவலும் முதலில் யாருக்கும் தெரியாது. அவரின் இறப்பிற்கு பின்பு பாதிப்பு தொடருமோ என்ற அச்சத்தில் அந்த வூஹான் சந்தை முற்றிலும் மூடப்பட்டது. இந்த தகவலை அரசும் அதிகாரிகளும் முதலில் மூடிமறைக்க முயன்றதாக பல சந்தேகங்கள் எழுந்தன.