Home /News /international /

100 நாள்கள் கடந்தும் ஓயாத போர் - உக்ரைனின் 20% இடத்தை கைப்பற்றிய ரஷ்யா

100 நாள்கள் கடந்தும் ஓயாத போர் - உக்ரைனின் 20% இடத்தை கைப்பற்றிய ரஷ்யா

போரால் பெரும் பாதிப்புக்குள்ளான உக்ரைன்

போரால் பெரும் பாதிப்புக்குள்ளான உக்ரைன்

போர் காரணமாக உலக சந்தையில், கச்சா எண்ணெய் உடன் சேர்த்து உணவு பொருள்கள் விலையும் ஏறுமுகத்தில் காணப்படுகிறது.

    உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நூறு நாளை எட்டியுள்ள நிலையில், உக்ரைன் நாட்டின் ஐந்து ஒரு பங்கு அதாவது 20 சதவீத இடத்தை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதை உக்ரைன் அதிபர் விளாதிமோர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    2014ஆம் ஆண்டில் இருந்தே உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து அந்நாட்டின் பகுதிகளை கைப்பற்றி வருகிறது. ஏற்கனவே, க்ரைமியா, டான்பாஸ் ஆகிய பகுதிகளை ரஷ்யா கைப்பற்றிய நிலையில், தற்போதைய போரின் மூலமாக 20 சதவீத பகுதியை ரஷ்யாவிடம் உக்ரைன் இழந்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் உத்தரவின் பேரில் உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. கிழக்கு பகுதிகளில் போர் தீவிரம் அதிகரித்துள்ள சூழலில், 100 நாள்களைத் தாண்டியும் போர் மேகம் விலகாத சூழலே அங்கு நீடிக்கிறது.

    அதேபோல், உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டணி பொருளாதார, ஆயுத உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன. இந்த போர் நீண்ட நாள்களுக்கு தொடரும் என நேட்டோ அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், தற்போதைய சூழலில் ரஷ்யாவுடன் நேரடியாக மோத நேட்டோ விரும்பவில்லை எனக் கூறியுள்ளது. கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அன்று உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், ஆரம்பத்தில் ரஷ்ய படைகள் தீவிரமா முன்னேறி வந்தன. இருப்பினும் உக்ரைன் உறுதியுடன் களத்தில் எதிர்த்து நின்ற காரணத்தால் ரஷ்யாவின் வேகத்தில் தடை ஏற்பட்டது. இதுவரை ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் போரில் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக அண்டை ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

    இந்த போரின் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ரஷ்யாவுடனான உறவு மேலும் மோசமடைந்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை விதித்துள்ளன. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து காணப்படுகிறது. அதேபோல், பல்வேறு பொருளாதாரத் தடைகளும் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ளது. போர் சூழல் காரணமாக உக்ரைன் நாட்டிலும் உள்நாட்டு உற்பத்தி முற்றாக முடங்கியுள்ளது.

    இதையும் படிங்க: 4500 ஆண்டுகள் பழைய உலகின் மிகப்பெரிய உயிரினத்தின் அளவு எவ்வளவு தெரியுமா ?

    உலகின் முன்னணி உணவு பொருள் உற்பத்தியாளராக உக்ரைன் விளங்குகிறது. பருப்பு, சமையல் எண்ணெய், தானியங்கள் ஆகியவற்றை உலக நாடுகளுக்கு அதிகளவில் உக்ரைன் ஏற்றுமதி செய்கிறது. இந்த போர் காரணமாக உலக சந்தையில், உணவு பொருள்கள் விலையும் ஏறுமுகத்தில் காணப்படுகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Russia, Russia - Ukraine

    அடுத்த செய்தி