• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ரஷ்யாவில் அதிகரித்த கொரோனா பரவல்: தினசரி உயிரிழப்பு 1000-ஐ கடந்து வருவதால் அதிர்ச்சி!!

ரஷ்யாவில் அதிகரித்த கொரோனா பரவல்: தினசரி உயிரிழப்பு 1000-ஐ கடந்து வருவதால் அதிர்ச்சி!!

ரஷ்யாவில் அதிகரித்த கொரோனா பரவல்: தினசரி உயிரிழப்பு 1000-ஐ கடந்து வருவதால் அதிர்ச்சி!!

ரஷ்யாவில் அதிகரித்த கொரோனா பரவல்: தினசரி உயிரிழப்பு 1000-ஐ கடந்து வருவதால் அதிர்ச்சி!!

ரஷ்யாவில் கொரோனா அதிகரித்து வருவதன் காரணமாக தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் புதிய வகை கிருமி ஊடுருவியுள்ளது.

  • Share this:
    உலகின் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் சூழலில், ரஷ்யாவில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக அங்கு தினசரி பாதிப்பு சராசரியாக 35 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.

    ரஷ்யாவின் 85 முக்கியமான நகரங்களில் தொற்று விகிதம் 8.8 ஆக உயர்ந்து வருகிறது. தலைநகர் மாஸ்கோவிலும், செயின்ட் பீட்டர்ஸ்பர்கிலும் கொரோனா பாதிப்பு நாள்தோறும் 3,000க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.

    அந்நாட்டில் பெருந்தொற்றால் தினசரி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து 1000 ஆக நீடித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1,072 ஆக பதிவாகியுள்ளது.

    ரஷ்யாவை ஒட்டியுள்ள உக்ரைனிலும் தொற்று பாதிப்பு வேகமெடுத்துள்ளது. தொற்று அதிகரித்துள்ளதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் 30ம் தேதி முதல் 7 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்நாட்டில் 2,30,600ஐ கடந்துள்ளது.

    சீனாவிலும் கொரோனா தொற்று மீண்டும் உயர்ந்து வருகிறது. தலைநகர் பீய்ஜிங்கில் 4 இடங்களில் கொரோனா பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளது. சீனாவில் மங்கோலியா, கன்சூ, ஹெபெய், ஹூனான் ஆகிய இடங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களை பரிசோதிக்கும் பணிகளை சீன அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

    இங்கிலாந்தில் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வகை கிருமி மும்பையிலும் காணப்பட்டுள்ளதாக INSACOG விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த கிருமிக்கு "AY.4.2" என்று பெயரிடப்பட்டுள்ளது. அதிதீவிர பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகை கிருமியை விட இதன் பாதிப்பு சற்றே குறைந்ததாக புதிய வகை கிருமி உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: