Home /News /international /

ஒரே மாதத்தில் 87,000 கொரோனா மரணங்கள்.. கலக்கத்தில் ரஷ்யா

ஒரே மாதத்தில் 87,000 கொரோனா மரணங்கள்.. கலக்கத்தில் ரஷ்யா

Covid Deaths

Covid Deaths

ஐரோப்பிய நாடுகளில் மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடாக விளங்கி வரும் ரஷ்யாவில் 45% பேர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

    உலகில் கொரோனா தொற்றால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி ரஷ்யா இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது.

    இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று இரண்டு அலைகளாக பாதிப்பை ஏற்படுத்தியது. சில நாடுகளில் மூன்று, நான்கு அலை பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஓரளவு கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. இதில் ரஷ்யாவில் பலி எண்ணிக்கை முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்திருக்கிறது. ரஷ்யாவில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

    Also read:   கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த காங்கிரஸ்

    ரஷ்யாவில் இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒரே மாதத்தில் 87000க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    Russia


    இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையுடன் சேர்த்து ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 658,634 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் உலகளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த இரண்டாவது நாடாக ரஷ்யா மாறியிருக்கிறது. ஏற்கனவே இரண்டாவது இடத்தில் இருந்த பிரேசில் மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது. பிரேசிலில் 6,18,800 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அங்கு 8,25,663 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

    Also read:  இந்தியாவில் முதல் ஓமைக்ரான் மரணம்

    ஐரோப்பிய நாடுகளில் மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடாக விளங்கி வரும் ரஷ்யாவில் 45% பேர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அக்டோபர், நவம்பரில் திடீரென பாதிப்புகள் அதிகரித்திருப்பதற்கு டெல்டா வேரியண்டே காரணமாக சொல்லப்படுகிறது.
    Published by:Arun
    First published:

    Tags: Corona, Covid-19, Russia

    அடுத்த செய்தி