இரண்டாம் உலகப்போர் முடிந்து 75 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், அந்தப் போரில் ஈடுபட்ட தனது வீரர்களை நினைவுகூரும் விதமாக, ஓவியங்கள் மற்றும் அருங்காட்சியகம் அமைத்து வீரர்களுக்கு இதய அஞ்சலியைத் தெரிவித்து வருகின்றனர் ரஷ்ய மக்கள்.
இரண்டாம் உலகப் போர், உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய எழுதுகோல். எப்போது என்ன மாற்றம் வரும் எந்த நாடு யாருடைய ஆதிக்கத்திற்குள் மாட்டிக்கொள்ளும் என்பன போன்ற விடை தெரியாத கேள்விகளுடனும், அச்சத்துடனும் மக்கள் தவித்த காலகட்டம் அது. அப்போது தனது நாட்டு வீரர்களை விருப்பத்துடனோ, விருப்பமில்லாமலோ, ராணுவத்தில் ஈடுபடுத்தியிருந்தது ரஷ்ய அரசு.
அதன் 75ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, தனது போர் வீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக , பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் ரஷ்ய மக்கள். ரஷ்யாவின் வீதிகளில், போர் வீரர்களின் உருவத்தை வரைந்து மரியாதை செலுத்துகின்றனர் .
ரஷ்ய போரில் ஈடுபட்டவர்களின் வீடுகளுக்கு அருகே, அவர்களின் உருவத்தை வரைந்து தங்களின் இதயப்பூர்வமான அன்பை வெளிப்படுத்துகின்றனர். தனக்கு 18 வயதாக இருக்கும்பொழுது ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டேன். இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டேன் என்று தனது அனுபவத்தை முதியவர் ஒருவர் பகிரும்போது, கேட்போர் நெஞ்சமெல்லாம் நெகிழ்ந்துவிடுகிறது.
இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட பலர் தற்போது உயிருடன் இல்லாத நிலையில், தற்போது 90 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் சிலருக்கு இந்த ஓவியங்கள் பழைய நினைவுகளுக்கு அழைத்துச் செல்கின்றன. இளைஞர்களுக்கோ, அந்த ஓவியங்கள் வரலாற்றைச் சொல்லித் தருகின்றன.
இரண்டாம் உலகப்போர் காலகட்டத்து ராணுவ உடைகள், துப்பாக்கிகள், போர்க் கருவிகள் என பலவற்றையும் இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் வகையில், அந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
தெரு ஓவியங்கள், அருங்காட்சியகம் என ரஷ்யா இரண்டாம் போரின் 75ம் ஆண்டு தினத்தை அடுத்த தலைமுறைக்கு பயனளிக்கும் வகையில் நினைவுகூர்ந்திருக்கிறது. வரலாறு தெரிந்த தலைமுறையால்தான் வளமான வருங்காலம் சாத்தியம் என்பதை ரஷ்ய மக்கள் சரியாக புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.