2036 வரை ரஷ்யாவின் அதிபர் - புதினின் சட்டத்திருத்தத்திற்கு மக்கள் ஆதரவு

2036 வரை ரஷ்ய அதிபராக பதவி வகிக்கும் வகையிலான புதினின் சட்ட திருத்தத்திற்கு அந்நாட்டு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

2036 வரை ரஷ்யாவின் அதிபர் - புதினின் சட்டத்திருத்தத்திற்கு மக்கள் ஆதரவு
ரஷ்ய அதிபர் புதின்
  • Share this:
ரஷ்யாவின் அரசியல் சாசனப்படி அந்நாட்டில் இருமுறைக்கு மேல் ஒருவர் அதிபர் பதவியை வகிக்க முடியாது. கடந்த 2012 ஆம் ஆண்டு ரஷ்ய அதிபராகப் பொறுப்பேற்ற விளாடிமிர் புதின் 6 ஆண்டுகளை நிறைவு செய்து தற்போது இரண்டாவது முறையாக பதவி வகித்து வருகிறார்.

2024 ஆம் ஆண்டு வரை அவரது பதவிக்காலம் உள்ள நிலையில், தனது பதவிக்காலத்தை மேலும் 12 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தார்.Also read... இன்று மட்டும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா உறுதி - இதுவரை 8 பேருக்கு பாதிப்பு

இதன் மூலம் மேலும் இருமுறை அவர் அதிபராக பதவி வகிக்க முடியும். இந்த சட்டத்திருத்தத்திற்கு மக்களின் ஒப்புதலைப் பெற நடைபெற்ற வாக்கெடுப்பில் இதுவரை எண்ணப்பட்ட 87 சதவீத வாக்குகளில் 77 சதவீதம் பேர் புதினுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன் மூலம் 2036 ஆம் ஆண்டு வரை புதின் அதிபராகப் பதவி வகிக்க முடியும்.

 
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading