ஹோம் /நியூஸ் /உலகம் /

உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்ய சொன்ன ரஷ்ய வீரரின் மனைவி - அதிர்ச்சி ஆடியோ வெளியானதால் சர்வதேச குற்றவாளியாக அறிவிப்பு

உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்ய சொன்ன ரஷ்ய வீரரின் மனைவி - அதிர்ச்சி ஆடியோ வெளியானதால் சர்வதேச குற்றவாளியாக அறிவிப்பு

ஒரு குரல் பதிவால் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ரஷிய வீரரின் மனைவி

ஒரு குரல் பதிவால் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ரஷிய வீரரின் மனைவி

ரேடியோ லிபர்ட்டியில் உள்ள புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் உக்ரேனிய சட்ட அமலாக்கத்துடன் இணைந்து இதை பேசிய பெண் யார் என்று தேடத் தொடங்கியுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Internationa, IndiaUkraine

ரஷ்யா-உக்ரைன் போரின் போது உக்ரைன் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யுமாறு கணவரிடம் கூறிய ஆடியோவால் சிக்கிய ரஷ்ய ராணுவ வீரரின் மனைவி, "சர்வதேச குற்றவாளிகள்" பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் பல பகுதிகலில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் ரஷ்ய நாட்டு ராணுவ வீரரின் மனைவி தன் கணவரிடம் தாக்குதல் நடத்தும் இடத்தில் உள்ள உக்ரைன் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யுமாறு கூறியுள்ளார். இந்த ஆடியோ வைரலாக பரவ, அவரை உக்ரேனிய போலீசார் தேடி வந்தனர்.

Leading Britain's Conversation என்ற செய்தி இணையதளத்தின் அறிக்கையின்படி 27 வயதான ரோமன் பைகோவ்ஸ்கி என அடையாளம் காணப்பட்ட ரஷிய வீரரிடம் தொலைபேசி அழைப்பில் பேசிய பெண், “அங்கு  உக்ரேனிய பெண்கள்  இருக்கிறார்கள். அவர்களை கற்பழி. என்னிடம் எதுவும் சொல்லாதே, புரிந்துகொள். இதனால் எனக்கு எதுவும் தெரியவராது. இதற்கு நான் அனுமதி தருகிறேன். ஆனால் பாதுகாப்பு உபகரணத்தை பயன்படுத்து" என்று சொல்லிவிட்டு சிரித்துள்ளார்.

இந்த குரல் பதிவு வைரலாக பரவத் தொடங்கியது. இதை கேட்டு பாதுகாப்புப் படையினர் மிரண்டு போயினர். பின்னர் ரேடியோ லிபர்ட்டியில் உள்ள புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் உக்ரேனிய சட்ட அமலாக்கத்துடன் இணைந்து இதை பேசிய பெண் யார் என்று தேடத் தொடங்கியுள்ளனர்.

ரூ.33 கோடி ஜாக்பாட்..! துபாயில் வேலை செய்யும் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்

புலனாய்வு குழு, அழைப்பில் தொடர்புடைய தொலைபேசியைக் தொடர்ந்து கண்காணித்தது. அந்த தொலைபேசிக்கு வந்த எண்களில் ஒன்று கெர்சன் பகுதியில் ஏப்ரல் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த அழைப்பில் இருந்த இரண்டு தொலைபேசி எண்களும் ரஷ்யாவின் VKontakte சமூக வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதன் பின்னர் அந்த பதிவில் பேசிய நபர்களில்  ஒன்று ரோமன் பைகோவ்ஸ்கி (27), மற்றொன்று அவரது மனைவி ஓல்கா பைகோவ்ஸ்கயா என்று அடையாளம் காணப்பட்டது.ரோமானின் கணக்கு சமூகவலைத்தளத்தில் இருந்து பொதுமக்களுக்கு மறைக்கப்பட்ட நிலையில், அவரது நண்பர் ஒருவரால் பதிவேற்றப்பட்ட போஸ்ட் வைத்து பத்திரிகையாளர்கள் அவரது புகைப்படங்களைக் கண்டறிந்தனர்.

பின்னர் அவரது மனைவி ஓல்கா பைகோவ்ஸ்கயாவை உக்ரேனிய புலனாய்வு அமைப்புகள் மாநில, மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்தனர்.

First published:

Tags: Crime News, International, Russia - Ukraine