10 வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை கொல்வதாக ரஷ்ய ராணுவம் மீது உக்ரைன்
குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ம்தேதி ரஷ்யா தொடங்கி போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாடு நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியனில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா இந்தப் போரை நடத்துகிறது.
இதில் ரஷ்யா தரப்பில் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை ரஷ்யா வெளியிடவில்லை.
இதையும் படிங்க - உக்ரைன் எரிபொருள் கிடங்கில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்..!
தொடர்ந்து ரஷ்ய படைகள் முன்னேறி வரும் நிலையில் கீவ், மரியுபோல் உள்ளிட்ட உக்ரைன் நகர வீதிகளில், பொதுமக்களின் சடலங்கள் கிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் நகரங்களை கைப்பற்றும் ரஷ்ய வீரர்கள் 10 வயது சிறுமிகள் என்றுகூட பாராமல் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் லெசியா வசிலெங்கோ குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், 'உக்ரைன் நகரங்களை கைப்பற்றும் ரஷ்ய வீரர்கள் கொள்ளையடிக்கின்றனர். பலாத்காரம், கொலைகளை செய்கின்றனர். 10 வயது சிறுமிகளின் அந்தரங்க உறுப்புகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பெண்கள் படுகாயப்படுத்தி ஸ்வஸ்திக் முத்திரையை அவர்கள் மீது ரஷ்ய வீரர்கள் பதிவு செய்துள்ளனர். ரஷ்யாவின் தாய்மார்கள் இந்த குற்றவாளிகளை வளர்த்துள்ளார்கள். இரக்கமற்ற குற்றவாளிகளைக் கொண்ட நாடு ரஷ்யா' என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க - இலங்கையில் 26 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா.. மகிந்த ராஜபக்சே மட்டும் பிரதமர் பதவியில் தொடர முடிவு
இதனை தவிர்த்து, படுகாயப்படுத்தப்பட்ட மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களையும் உக்ரைன் எம்.பி. வெளியிட்டு, இனப்படுகொலையை ரஷ்யாவும், புதினும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.