ஹோம் /நியூஸ் /உலகம் /

இதுதான் காரணம்.. முதல்முறையாக உக்ரைன் போர் நிறுத்தம்.. ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு

இதுதான் காரணம்.. முதல்முறையாக உக்ரைன் போர் நிறுத்தம்.. ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு

விளாதிமிர் புதின்

விளாதிமிர் புதின்

ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் உக்ரைன் மீதானா போர் தாக்குதல் நிறுத்தப்படும் என ரஷ்ய அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaMoscowMoscow

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உக்ரைன் நாட்டிற்கு எதிரான போரை இரு நாள்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கி சுமார் ஓராண்டு ஆகும் நிலையில், போர் நிறுத்த அறிவிப்பு வருவது இதுவே முதல்முறை. கடந்தாண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உக்ரைன் நாட்டின் மீது போர் அறிவித்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். 11 மாதங்கள் ஆகியும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த திடீர் படையெடுப்பு ஓய்ந்தபாடில்லை. ஆரம்பத்தில் ரஷ்யா வெகு வேகமாக முன்னேறி உக்ரைனின் முன்னணி நகரங்களை கைப்பற்றியது.

இருப்பினும் உக்ரைன் சரணடையாமல் நேட்டோ நாடுகளின் உதவியுடன் ரஷ்ய படைகளை எதிர்த்து போராடி ரஷ்யாவுக்கு கடும் சவால் தந்து வருகிறது.இரு நாடுகளுக்கு இடையே ஏதோ ஒருவிதத்தில் உடன்படிக்கை கொண்டு வந்து போரை நிறுத்த உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் உக்ரைன் மீதானா போர் தாக்குதல் நிறுத்தப்படும் என ரஷ்ய அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.

அந்நாட்டில் ஆட்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிக்கையில் கூறப்படுகிறது.

மக்கள் தேவாலயங்களில் சென்று பிரார்த்தனை செய்வதற்கு ஏதுவாக இரு நாள்கள் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க: கிராமத்துக்கு போங்க..தலைநகரில் இருந்து குடிபெயர்ந்தால் ரூ.6 லட்சம் உதவித்தொகை..ஜப்பான் அரசு புது திட்டம்

கடந்த இரு வாரங்களில் தான் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் நடந்து முடிந்தன. அப்போது கூட போர் நிறுத்த அறிவிப்பை வெளியிடாமல் ஆர்ஸ்தாக்ட்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இந்த அறிவிப்பை புதின் வெளியிட்டுள்ளது கவனத்தை பெற்றுள்ளது. மேலும், துருக்கி நாட்டு அதிபர் எர்டோகன் புதினிடம் நேற்று தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு போரை முழுமையாக நிறுத்துமாறு வலியுறுத்தினார். எனினும், இந்த தற்காலிக போர் நிறுத்தத்தை உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சந்தேகத்துடனே பார்க்கின்றன.

First published:

Tags: Russia - Ukraine, Vladimir Putin, War