முகப்பு /செய்தி /உலகம் / அணு ஆயுதத்தை கையில் எடுப்பேன்... மிரட்டல் விடுத்த ரஷ்ய அதிபர்

அணு ஆயுதத்தை கையில் எடுப்பேன்... மிரட்டல் விடுத்த ரஷ்ய அதிபர்

ரஷ்ய அதிபர் புடின்

ரஷ்ய அதிபர் புடின்

Ukraine Russia war : ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் அணு ஆயுத மிரட்டல் விடுத்திருபதாக வெளியாகி இருக்கும் தகவல் உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இந்த போருக்கு முன்னதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் ஆற்றிய உரையில் அணு ஆயுத மிரட்டல் விடுத்திருபதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலை கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஜி7 கூட்டமைப்பும் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதிக்க திட்டமிட்டு வருகிறது. மேற்கத்திய நாடுகள் மீது, பொருளாதார தடைகளை விதித்து ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். இதனால், உலோகங்கள் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களுக்கு, ரஷ்யாவையே நம்பியுள்ள மேற்கத்திய நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தது. அத்ந தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், ரஷ்யா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது. இதனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. சபையின் தீர்மானம் தோல்வியடைந்தது.

இந்நிலையில், உக்ரைன் மீதான போருக்கு முன்னதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் ஆற்றிய உரையில், ராணுவ விவகாரங்களை பொறுத்தவரையில், ''சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பின்னரும், அதன் திறன்களில் கணிசமான பகுதிகளை இழந்த பின்னரும், இன்றைய ரஷ்யா மிகவும் பலம்வாய்ந்த அணுசக்தி நாடுகளில் ஒன்றாகவே திகழ்கிறது. பல்வேறு அதிநவீன ஆயுதங்களைக் காட்டிலும் இது ஒரு குறிப்பிட்ட நன்மையைக் கொண்டுள்ளது.

இந்த சூழலில், எந்தவொரு நாடும் நேரடியாக நம் நாட்டை(ரஷ்யாவை) தாக்கினால் தோல்வியையும், பயங்கரமான விளைவுகளையும் சந்திக்க நேரிடும்'' என்று அவர் கூறி உள்ளார். இந்நிலையில், அணு ஆயுதப் போரையே குழப்பமான வரிகளில் புடின் சுட்டிக்காட்டி இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும், உக்ரைனுக்கு எதிரான போரில் அந்த நாட்டிற்கு ஆதரவாகவும், ரஷ்யாவுக்கு எதிராகவும் அமெரிக்காவோ அல்லது பிற நாடுகளோ, தாக்குதல் தொடுத்தால் அவர்களுக்கு பதிலடி கொடுக்க அணு ஆயுதம் உள்ளது என்கிற ரீதியில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் மிரட்டல் அமைந்து இருப்பதாக சொல்லப்படுவது உலக அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Must Read : எனது குடும்பத்தை கொல்ல திட்டமிட்டுள்ளனர்... உக்ரைன் தனித்து விடப்பட்டுள்ளது... அதிபர் செலன்ஸ்கி வேதனை

இரண்டாம் உலகப்போரின் இறுதி கட்டத்தில் ஜப்பானின் ஹிரோஷிமா-நாகசாகி மீது அமெரிக்கா அணு ஆயுததாக்குதல் நடத்தியதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல லட்சம் மக்கள் அணு கதிரின் விளைவால் இன்று வரையில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவுக்கு எதிராக சைபர் போரை தொடங்கிய ஹேக்கர்கள்...

இதற்கிடையில், ரஷ்யா தனது குடும்பத்தை கொல்வதற்கும் திட்டமிட்டிருப்பதாகவும், இந்த போரில் தாங்கள் தனித்து விடப்பட்டிருப்பதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் உன்ரைன் அதிபர் செலன்ஸ்கி .

உக்ரைனில் வாழும் தமிழர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள

உதவி எண் : +91 9940256444 / +91 9600023645, 044-2851 5288

மின்னஞ்சல் : nrtchennai@tn.gov.in / nrtchennai@gmail.com

வலைதளம் : https://nrtamils.tn.gov.in

Facebook : https://www.facebook.com/nrtchennai1038

Twitter : @tamiliansNRT

மத்திய வெளியுறவுத்துறை உதவி எண்கள்: 

1800118797 (Toll free)

+91-11-23012113, +91-11-23014104, +91-11-23017905

மின்னஞ்சல்: situationroom@mea.gov.in

First published:

Tags: Nuclear, Russia - Ukraine, Vladimir Putin