ஹோம் /நியூஸ் /உலகம் /

உக்ரைன் போர் சீக்கிரம் முடிவுக்கு வரும் - ரஷ்ய அதிபர் புதின் திடீர் கருத்து

உக்ரைன் போர் சீக்கிரம் முடிவுக்கு வரும் - ரஷ்ய அதிபர் புதின் திடீர் கருத்து

ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்ய அதிபர் புதின்

உக்ரைன் போரை விரைவாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே ரஷ்யாவின் இலக்கு என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaMoscowMoscow

2022 பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உக்ரைன் நாட்டின் மீது போர் அறிவித்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். 10 மாதங்கள் ஆகியும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த திடீர் படையெடுப்பு ஓய்ந்தபாடில்லை. ஆரம்பத்தில் ரஷ்யா வெகு வேகமாக முன்னேறி உக்ரைனின் முன்னணி நகரங்களை கைப்பற்றியது. இருப்பினும் உக்ரைன் சரணடையாமல் நேட்டோ நாடுகளின் உதவியுடன் ரஷ்ய படைகளை எதிர்த்து போராடி ரஷ்யாவுக்கு கடும் சவால் தந்து வருகிறது.

இந்த போரை நிறுத்த உலக நாடுகளும்,சர்வதேச அமைப்புகளும் தொடர் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.அதேவேளை, ரஷ்ய ராணுவமோ கடந்த வாரம் உக்ரைன் தலைநகர் கிவ்வை பிடிக்க பல ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தின.இதனால் அங்கு லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இதன் பின்னணியில் உக்ரைன் அதிபர் விளாதிமோர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை நேற்று சந்தித்தார். போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா முழு ஆதரவு தரும் என இந்த சந்திப்பின் போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் ஜோ பைடன் உறுதி அளித்தார். அத்துடன் உக்ரைனுக்கு கணிசமான நிதியுதவி வழங்கி அமெரிக்கா அறிவித்தது.

இதையும் படிங்க: கல்யாணத்துக்கு போற மாதிரி டிரெஸ் போடுறாங்க.. இதெல்லாம் ஒத்துவராது - பெண்களுக்கான உயர்கல்வி தடை குறித்து தாலிபான் விளக்கம்

இந்த சூழலில் ரஷ்யா தரப்பில் இருந்து திடீர் அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த போர் குறித்து நிருபர்களிடம் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர், விரைவாக போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே ரஷ்யாவின் இலக்கு. அதற்காக தான் ரஷ்யா முயற்சி செய்து வருகிறது. எனவே, விரைவில் போரை முடிவுக்கு கொண்டுவருவோம் என நம்புகிறேன் என்று தெரிவித்தார். புதினின் இந்த கருத்து சர்வதேச அரங்கில் கவனத்தை பெற்றுள்ளது. ரஷ்ய ராணுவத்தை கட்டுப்படுத்தி போரை நிறுத்த போகிறாரா அல்லது போரை தீவிரப்படுத்தி விரைவு நடவடிக்கையில் நிறுத்தப் போகிறாரா என புதினின் நகர்வை சர்வதேச நாடுகள் உற்று நோக்கியுள்ளன.

First published:

Tags: Russia - Ukraine, Vladimir Putin, War