முகப்பு /செய்தி /உலகம் / பறக்கும் விமானத்தில் பயிற்சி பெண்ணுடன் செக்ஸ் வைத்து வீடியோ எடுத்த விமானி

பறக்கும் விமானத்தில் பயிற்சி பெண்ணுடன் செக்ஸ் வைத்து வீடியோ எடுத்த விமானி

பறக்கும் விமானத்தில் பயிற்சி பெண்ணுடன் செக்ஸ்

பறக்கும் விமானத்தில் பயிற்சி பெண்ணுடன் செக்ஸ்

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் பயிற்சி பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.

  • Last Updated :

ரஷ்யாவில் விமானி ஒருவர் தன்னிடம் விமான பயிற்சி பெறும் பெண்ணுடன் ஓடும் விமானத்தில் பாலியல் உறவு கொண்டு அதை வீடியோ எடுத்த பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. ரஷ்யாவின் சசோவா விமான பள்ளியில் பணி புரியும் 28 வயது விமான பயிற்சி ஆசிரியர், தன்னிடம் பயிற்சி பெறும் பெண்ணுடன் செஸ்னா 172 என்ற விமானத்தில் வழக்கம் போல பயிற்சிக்காக பயணம் மேற்கொண்டார்.

இந்த பயணத்தின் போது அந்த ஆண் விமானி பெண் பயிற்சியாளரிடம் தன்னுடன் பறக்கும் விமானத்தில் பாலியல் உறவு கொள்ள வேண்டும் அதை நான் வீடியோ படம் பிடிக்கப் போகிறேன் என்றுள்ளார். இதற்கு அந்த பெண் முதலில் தயங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த ஆண் பயணி திருமணமானவர் என்ற நிலையில், நான் உனக்கு கூடுதல் வகுப்பு எடுத்து நன்றாக பயிற்சி அளிப்பேன் என அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணும் விமானியின் கோரிக்கைக்கு சம்மதம் கொடுத்துள்ளார். விமானத்தை ஆட்டோ பைலட் மோட்டில் போட்டு இருவரும் ஓடும் விமானத்தின் காக்பிட் பகுதியில் பாலியல் உறவில் ஈடுபட்டு அதை வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் கசிந்து வைரலாகியுள்ளது. இது விமான பள்ளியின் நிர்வாகத்திற்கு தெரிய வரவே, விசாரணையில் சம்பந்தப்பட்ட இருவரையும் பள்ளியில் இருந்து நீக்கியுள்ளது.

இதையும் படிங்க: எனக்கு 19.. உனக்கு 76.. மூதாட்டியுடன் நிச்சயித்து மோதிரம் மாற்றிக்கொண்ட இளைஞர்

அத்துடன் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த வீடியோவை அந்த ஆண் விமானியின் தோழர் ஒருவர் தான் சண்டை காரணமாக ஆத்திரத்தில் கசிய விட்டார் எனக் கூறப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட பெண் விமானி முதலில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க தான் முதலில் சம்மதம் வழங்கியதாகவும் பின்னர் அதை சாதமாக வைத்து ஆண் பயணி பாலியல் உறவு வரை கொண்டு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான விசாரணை அறிக்கை வெளியிடப்படும் என விமான பயிற்சி நிறுவனம் கூறியுள்ளது. அத்துடன் விமானிகள் இதுபோன்ற அத்துமீறிலில் ஈடுபட்டால் உடனடி பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் திட்டவட்டமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Pilot cabin, Russia