ஹோம் /நியூஸ் /உலகம் /

மின் நிலையங்களை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்..இருளில் மூழ்கும் அபாயத்தில் உக்ரைன்!

மின் நிலையங்களை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்..இருளில் மூழ்கும் அபாயத்தில் உக்ரைன்!

உக்ரைன் மின் உற்பத்தி மையத்தில் ரஷ்யா ஏவுகணை தக்குதல்

உக்ரைன் மின் உற்பத்தி மையத்தில் ரஷ்யா ஏவுகணை தக்குதல்

உக்ரைன் நாட்டிற்கு இந்தியர்கள் யாரும் மிக அத்தியாவசிய தேவை இன்றி பயணம் செய்ய வேண்டாம் என இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaKyivKyiv

  உக்ரைனின் கீவ் நகரில் உள்ள மின் நிலையத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலால், மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

  உக்ரைன் மீது கடந்த 8 மாதங்களாக ராணுவத் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, உக்ரைனுக்கு சொந்தமான பல நகரங்களை கைப்பற்றியுள்ளது. எனினும், ரஷ்ய படைகளிடம் சரணடைய மறுத்து உக்ரைன் ராணுவம் தீரத்துடன் சண்டையிட்டு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள மின் நிலையம் மீது ரஷ்யா நேற்று கடும் தாக்குதலை நடத்தியது. பெரிய அளவிலான இந்த ஏவுகணைத் தாக்குதலில் மின்சார உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

  இதன் காரணமாக கீவ் நகர மக்கள் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்த வேண்டும் என உக்ரைன் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ரஷ்யா நடத்திய தாக்குதலில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என கீவ் நகர கவர்னர் தெரிவித்தார். மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பையும் சரி செய்யும் பணிகளும் மறுபுறம் நடைபெற்று வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள் உதவி வருகின்றன.

  இதையும் படிங்க: உக்ரைனை NATOவில் சேர்த்தால் 3ஆம் உலகப் போர் ஏற்படும்.. ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை!

  அந்நாட்டிற்கு அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தடையில்லா இணைய சேவையை இந்த போர்க்காலத்தில் இலவசமாக வழங்கி வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஸ்பேஸ் எக்ஸ் சிஇஓ எலான் மஸ்க் தன்னால் நீண்ட நாள்களுக்கு ஸ்டார்லிங்க் இணைய சேவையை தரமுடியாது என்று திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இது அமெரிக்க அரசு மற்றும் உக்ரைன் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது நான் உக்ரைனுக்கு வழக்கம் போல இலவச சேவை தர தயார் என மஸ்க் யூ-டர்ன் அடித்துள்ளார்.

  உக்ரைன் போர் பதற்றமான சூழலை எட்டியுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை மூலம் அலெர்ட் தந்துள்ளது. அதன்படி, உக்ரைன் நாட்டிற்கு இந்தியர்கள் யாரும் மிக அத்தியாவசிய தேவை இன்றி பயணம் செய்ய வேண்டாம் என இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Elon Musk, Russia - Ukraine, Vladimir Putin