நடுவானில் தீப்பிடித்த ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறி விபத்து - வைரல் வீடியோ!

ஹெலிகாப்டர் விபத்து

ஹெலிகாப்டர் செல்வதைப் பார்த்து படம்பிடிக்கும்போது, அந்த ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.

  • Share this:
ரஷ்யாவில் 3 பேருடன் பறந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நடுவானில் தீப்பிடித்து வெடித்துச் சிதறிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் டிரான்ஸ்போர்ட் Il-112 ஹெலிகாப்டரின் சோதனை ஓட்டம் மாஸ்கோ நகருக்கு வெளியே நடைபெற்றது. அந்த ஹெலிகாப்டரில் 3 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், நடுவானில் செல்லும்போது திடீரென தீப்பிடித்தது. அப்போது, ஹெலிகாப்டரை தரையிறக்க பைலட் முற்பட்ட நிலையில், தீயானது மளமளவென பரவி ஹெலிகாப்டர் முழுவதும் பரவியது.

Also Read: அந்த மனசுதான் சார் கடவுள்.. ஆப்கான் குழந்தைகளை அரவணைக்கும் அமெரிக்க வீரர்கள்

தீப்பிடித்த நிலையிலேயே சிறிது தொலைவு பயணித்த ஹெலிகாப்டர், திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறியது. பின்னர், வானுயர கரும்புகைகள் எழுந்து, காண்போரை அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்தக் காட்சிகள் அனைத்தும் தொலைவில் இருந்து ஒருவர் படம்பிடித்துள்ளார். மிகவும் கீழாக ஹெலிகாப்டர் செல்வதைப் பார்த்து படம்பிடிக்கும்போது, அந்த ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.

https://twitter.com/bazabazon/status/1427554669019160588?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1427559349442973698%7Ctwgr%5E%7Ctwcon%5Es3_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fauto%2Fhorrifying-video-captures-russian-military-aircraft-crashing-after-catching-fire-4096100.html

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹெலிகாப்டரில் இருந்தவர்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. இது குறித்து ரஷ்ய ராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விபத்து நடந்தது எதனால் என்பது குறித்த அனைத்து தகவல்களும் விசாரணைக்கு பிறகே தெரிய வரும் எனக் கூறப்படுகிறது. ராணுவம் தொடர்பான சரக்குகளை ஏற்றிச்செல்வதற்காக இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் இந்த ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: