கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான யூடியூப் வீடியோ தளம் மூலம், உலகம் முழுவதும் பலர் ஆயிரங்களில் தொடங்கி கோடிகள் வரை வருமானமாக ஈட்டி வருகின்றனர். அதிகப்படியான பார்வைகள் (Views) கிடைக்கும் வீடியோக்களுக்கு கூடுதலான பணம் கிடைக்கும் என்பதால், பார்வையாளர்களை இம்பரஸ் செய்ய, யூடியூபர்கள் பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். ஆனால், ரஷ்யாவில், யூடியூப் கலாச்சாரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. அங்கு பார்வையாளர்களிடம், யூடியூபர் பந்தயமிட்டுக்கொண்டு பார்வையாளர்கள் விரும்பும் வீடியோவை பதிவேற்றி வருகின்றனர். பார்வையாளர் விரும்பும் வீடியோவை பதிவேற்றினால், பந்தயமிட்ட தொகையை உடனடியாக யூடியூபருக்கு பார்வையாளர் கொடுக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.