ஹோம் /நியூஸ் /உலகம் /

700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தில் நிர்வாண போட்டோ ஷூட் - பாலி தீவில் இருந்து சுற்றுலா பயணி வெளியேற்றம்

700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தில் நிர்வாண போட்டோ ஷூட் - பாலி தீவில் இருந்து சுற்றுலா பயணி வெளியேற்றம்

Alina Fazleeva

Alina Fazleeva

உள்ளூர் மக்களின் உணர்வை புன்படுத்திய தனது செயலுக்கு ரஷ்யா சுற்றுலா பயணி அலினா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    ரஷ்யாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான அலினா பஸ்லீவா, தனது கணவருடன் இந்தோனேசிய தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள பாலி தீவுகளுக்கு தனது கணவருடன் சென்ற அலினா, இயற்கை எழில் கொஞ்சம் மலைகள், மரங்கள் ஆகியவற்றை ஆர்வத்துடன் கண்டு களித்துள்ளார்.

    அத்துடன், அங்குள்ள தெபனான் மாவட்டத்தில் உள்ள 700 ஆண்டு பழமையான ஆலமரத்தை பார்த்துள்ளார் அலினா. இந்த மரம் அவருக்கு மிகவும் பிடித்துபோன நிலையில், அந்த மரத்தை தழுவிக்கொண்டு நிர்வாணமாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதை அவர் இன்ஸ்ட்ராகிரமில் அப்லோட் செய்த நிலையில், அந்த பதிவு வைரலானது.

    வைரலான அந்த பதிவைப் பார்த்து பாலியைச் சேர்ந்த மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். பாலியைச் சேர்ந்த மக்களின் நம்பிக்கை படி, மரங்கள், மலைகள் உள்ளிட்ட இயற்கையை கடவுளாக கருதுகிறார்கள். அலினாவின் இந்த செயல் உள்ளூர் வாசிகளை காயப்படுத்தியுள்ளது. இதையடுத்து, அலினாவும் அவரது கணவரையும் பாலி குடியேற்ற அதிகாரி ஜமாருலி மணிஹுருக் அங்கிருந்து வெளியேற்றியுள்ளார்.

    இவர்களின் செயல் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாகவும், உள்ளூர் விதிகளை மீறியதாகவும்  உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இந்தோனேசியாவில் நுழைய ஆறு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளூர் மக்கள் புனிதமாகக் கருதும் அந்த இடத்தை தூய்மை செய்யும் பணியில் இவர்கள் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதனிடையே தன்னுடைய செயலுக்கு அலினா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். தான் பெரிய தவறு இழைத்துவிட்டதாகவும், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு புனிதமான நம்பிக்கை இருக்கும், தனக்கு அது தெரியாத காரணத்தால் இந்த தவறு நடைபெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.  மக்களின் நம்பிக்கையை மதிப்பது மிகவும் முக்கியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: தன்னை கழுதையுடன் ஒப்பிட்டு நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளான இம்ரான் கான்

    சுற்றுலா விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக பாலியில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் கடந்தாண்டு வெளியேற்றப்பட்டனர்.இது போன்ற செயல்களை ஒருபோதும் தாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என பாலியின் ஆளுநர் வயான் கோஸ்டர் திட்டவட்டமாகக் தெரிவித்துள்ளார்.

    Published by:Kannan V
    First published:

    Tags: Indonesia, Nude Photography