Home /News /international /

போரில் திடீர் திருப்பம்.. ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரங்களை மீட்ட உக்ரைன் ராணுவம்

போரில் திடீர் திருப்பம்.. ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரங்களை மீட்ட உக்ரைன் ராணுவம்

முக்கிய நகரங்களை மீட்ட உக்ரைன் படையினர்

முக்கிய நகரங்களை மீட்ட உக்ரைன் படையினர்

ரஷ்யா கட்டுப்பாட்டில் இருந்து உக்ரைனின் நகரப்பகுதிகளை உக்ரைன் நாட்டு படையினர் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaKharkivKharkivKharkiv
    ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் நாட்டின் மீது போர் அறிவித்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். எட்டு மாதங்கள் ஆகியும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த திடீர் படையெடுப்பு ஓய்ந்தபாடு இல்லை. இரு நாடுகளின் போரானது அந்த பிராந்தியத்தை மட்டுமல்லாது உலக நாடுகளில் அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஐரோப்பிய கண்டத்தில் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை உருவாக்கியதுடன், உலக நாடுகளில் பெரும் பொருளாதார சரிவுகளை இந்த போர் ஏற்படுத்தியுள்ளது.ஆரம்பத்தில் ரஷ்யா வெகு வேகமாக முன்னேறி உக்ரைனின் முன்னணி நகரங்களை கைப்பற்றியது. இருப்பினும் உக்ரைன் சரணடையாமல் ரஷ்ய படைகளை எதிர்த்து போராடி ரஷ்யாவுக்கு ஆச்சரியம் தந்தது. உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய அமெரிக்க கூட்டமைப்பான நோட்டோ நாடுகள் பொருளாதார ஆயுத உதவிகளை வழங்கி வந்தன.

    அதன் துணை கொண்டு ரஷ்ய படைகளை உக்ரைன் எதிர்த்து நின்று தாக்குப்பிடித்து வருகிறது. இந்நிலையில், தற்போது போரில் முக்கிய நகர்வாக ரஷ்யா கட்டுப்பாட்டில் இருந்து உக்ரைனின் நகரப்பகுதிகளை உக்ரைன் நாட்டு படையினர் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள கார்கிவ் மற்றும் கீவ் ஆகிய நகரங்களின் பெரும்பாலான பகுதிகளின் கட்டுப்பாட்டை உக்ரைன் ராணுவத்தினர் மீண்டும் தங்கள் வசம் கொண்டுவந்துள்ளனர்.

    இதையும் படிங்க: நீ உன் சொந்தநாட்டுக்கே போ.. இந்திய வம்சாவெளி எம்பி-க்கு அமெரிக்காவில் மிரட்டல்

    செப்டம்பர் மாத ராணுவ நடவடிக்கை மூலம் உக்ரைன் ராணுவம் சுமார் 2,000 கிமீ பகுதியை மீட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் விளாதிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.உக்ரைனின் இந்த பதில் நடவடிக்கை காரணமாக சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து ரஷ்ய ராணுவம் பின்வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எட்டு மாத போரில் ரஷ்யாவின் பலம் சரிந்து உக்ரைன் நம்பிக்கையுடன் எதிர் தாக்குதல் நடத்துவது இந்த போரின் போக்கில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துமா என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். ரஷ்யா மீண்டும் தீவிரத்துடன் ராணுவ நடவடிக்கையை தொடருமா அல்லது பின்வாங்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Russia - Ukraine, War

    அடுத்த செய்தி