உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு எல்லையில் உள்ள ரஷ்ய படைகள் முகாம்களுக்கு திரும்பி வருவதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டின்போது, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. சோவியத் யூனியனில் அங்கம் வகித்த உக்ரைன் நாட்டில், மக்கள் பேசும் மொழி, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை உள்ளிட்டவை ரஷ்யாவை ஒத்துப் போகும்.
ஆனால், எல்லை பிரச்னை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. உக்ரைன் நாடு ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளது. இதற்கு அமெரிக்காவும் தனது ஆதரவை அளித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் எல்லை பகுதிகளில் ரஷ்யா அதிரடியாக ராணுவத்தை குவித்தது.
எப்போது வேண்டுமானலும் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக வெளியேற பல நாடுகளும் அறிவுறுத்தியது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருந்தார்.
இதையும் படிங்க: கனடாவில் 1970க்கு பிறகு அவசர நிலை பிரகடனம்... தந்தை வழியில் ஜஸ்டின் ட்ரூடோ...
இந்நிலையில், உக்ரைன் எல்லையில் இருந்த படைகளை ரஷ்யா திரும்பபெற்றுள்ளன. இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு எல்லையில் உள்ள ரஷ்ய படைகள் முகாம்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளன’ என்று தெரிவித்துள்ளது.
மேலும் படிங்க: குழந்தைகளுக்கான புற்றுநோய் தடுப்பு சர்வதேச நாள் - குழந்தைகளிடம் இந்த நோயை தடுப்பது எப்படி?
ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஸ்கால்ஸ் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்புக்கு முன்பாக ரஷ்யா உக்ரைன் எல்லையில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று ஜெர்மனி தரப்பில் அழுத்தம் தரப்பட்டது. இதை தொடர்ந்தே ரஷ்யா தனது படைகளை வாபஸ் பெறத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் இந்த திடீர் நடவடிக்கை போர் பதற்றத்தை தணித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Germany, Russia, Russia - Ukraine, Vladimir Putin