Home /News /international /

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்.. வீட்டோ அதிகாரத்தின் மூலம் தீர்மானத்தை முடக்கிய ரஷ்யா!!

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்.. வீட்டோ அதிகாரத்தின் மூலம் தீர்மானத்தை முடக்கிய ரஷ்யா!!

ரஷ்யாவுக்கு எதிராக மிக கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும் என இந்தியாவை அமெரிக்க வலியுறுத்தியிருந்த போதும், வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

ரஷ்யாவுக்கு எதிராக மிக கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும் என இந்தியாவை அமெரிக்க வலியுறுத்தியிருந்த போதும், வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

ரஷ்யாவுக்கு எதிராக மிக கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும் என இந்தியாவை அமெரிக்க வலியுறுத்தியிருந்த போதும், வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

    உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு கண்டனம் தெரிவிக்கும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரஷ்யா முடக்கியது. உக்ரைனில் நாஜி படைகளை போல ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் பிரிதிநிதி வேதனை தெரிவித்துள்ளார்.

    உக்ரைன் எல்லையில் இருந்தும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருந்தும், ரஷ்யா தனது படைகளை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவும் அல்பேனியாவும் தீர்மானம் கொண்டுவந்தன. தீர்மானத்திற்கு ஆதரவாக

    பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, அல்பேனியா, பிரேசில், காபோன், கானா, அயர்லாந்து, கென்யா, மெக்சிகோ மற்றும் நார்வே ஆகிய 11 நாடுகள் வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தன. எனினும், ரஷ்யா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது.

    இதையும் படிங்க - உக்ரைன் ராணுவத்தை துவம்சம் செய்யத் தொடங்கிய ரஷ்யா... நவீன ஏவுகனைகள் மூலம் அதிரடி தாக்குதல்

    இதனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும், ஐ.நா. சபையின் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. வாக்கெடுப்பின் போது பேசிய அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரின் பீல்ட், தீர்மானத்தை ரஷ்யா தடுக்கலாம், ஆனால் மற்றவர்களின் குரலை தடுக்க முடியாது என கூறினார்.

    தொடர்ந்து பேசிய, உக்ரைன் பிரதிநிதி செர்ஜி கிலெட்சா, நாஜி படைகளை போல ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக கூறினார்.

    பாதுகாப்பு கவுன்சிலின் விதிமுறைகளை மீறி, குற்றம்சாட்டப்பட்ட நாட்டின் தூதரே வாக்கெடுப்பை நடத்தியதற்கும் உக்ரைன் தூதர் கண்டனம் தெரிவித்தார்.

    ரஷ்யாவுக்கு எதிராக மிக கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும் என இந்தியாவை அமெரிக்க வலியுறுத்தியிருந்த போதும், வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. எனினும் கூட்டத்தில் பேசிய இந்திய பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி, அனைத்து நாடுகளும், சர்வதேச கொள்கைகளை மதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ரஷ்யாவுடன் மிக நெருக்கமான உறவு கொண்டுள்ள சீனாவும் வாக்கெடுப்பை புறக்கணித்தது.

    உயிரை துச்சமென கருதி சரணடைய மறுத்த 13 உக்ரைன் வீரர்கள்.. ரஷ்ய படையினரால் சுட்டுக் கொலை!

    முன்னதாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் இடம் பெற்றிருந்த "கண்டிக்கிறது" என்ற வார்த்தை "வருந்துகிறது" என மாற்றப்பட்டது

    இதையடுத்து, இதே போன்ற ஒரு தீர்மானம் 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட, ஐ.நா.பொதுச்சபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் எந்தவொரு தீர்மானத்தையும் நிறுத்தி வைக்கக் கூடிய, வீட்டோ எனும் அதிகாரத்தை நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 5 நாடுகள் மட்டும் பெற்றுள்ளன.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Russia, Russia - Ukraine

    அடுத்த செய்தி