முகப்பு /செய்தி /உலகம் / உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் அமெரிக்க செய்தியாளர் சுட்டுக்கொலை

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் அமெரிக்க செய்தியாளர் சுட்டுக்கொலை

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 3 வாரங்களை கடந்துள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 3 வாரங்களை கடந்துள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 3 வாரங்களை கடந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உக்ரைன் நாட்டில் போர் நடந்து வரும் நிலையில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் அமெரிக்க செய்தியாளர் பிரென்ட் ரெனாட் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

உக்ரைனின் இர்பின் நகரில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது, ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் இர்பின் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவருடன் பணியில் இருந்த செய்தியாளர்கள் 2 பேர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள சூழலில் உக்ரைன் தலைநகர் கீவ்-வுக்கு 25 கிலோ மீட்டர் தூரத்தில் ரஷ்ய படைகள் உக்கிர தாக்குதல் நடத்தி வருகின்றன. முக்கிய நகரங்கள் சுற்றி வளைக்கப்பட்டு தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 3 வாரங்களை கடந்துள்ளது. கிழக்கு-மத்திய நகரமான டினிப்ரோ மற்றும் மேற்கு லுட்ஸ்க் மற்றும் இவானோ-ஃபிரான்கிவ்ஸ்கில் உள்ள விமான நிலையங்கள் மீதும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்துகின்றன.

இதையும் படிங்க - தொடரும் ரஷ்யாவின் தாக்குதல்... உக்ரைனில் செயல்படும் தூதரகத்தை மாற்றுகிறது இந்தியா

செர்னிவ், கார்கிவ், மரியுபோல் மற்றும் சுமி ஆகிய நகரங்கள் ஏற்கனவே சுற்றி வளைக்கப்பட்டு, தொடர்ந்து ஏவுகணைகளை வீசுவதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர். தாக்குதல்களில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மாற்றப்படுகிறது.

இதையும் படிங்க - உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர் இந்தியா திரும்ப விருப்பம்

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது- உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது. மேற்கு பகுதிகளிலும் தாக்குதல் நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக அங்கு செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் தற்காலிகமாக போலாந்து நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. உக்ரைனில் நிலையை சீரடைவதற்கு ஏற்ப தூதரகத்தை அங்கு மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

இந்நிலையில் உக்ரைனில் நிலவும் சூழல் குறித்து, பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட குழு, இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில் தூதரகத்தை உக்ரைனில் இருந்து போலந்து நாட்டிற்கு மாற்றுவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே உக்ரைனில் சிக்கியுள்ள குடிமக்கள், குறிப்பாக மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

First published:

Tags: Russia - Ukraine