உக்ரைனில் கார் மீது ஏறிய ரஷ்ய பீரங்கி... பதபதைக்க வைக்கும் வீடியோ
உக்ரைனில் கார் மீது ஏறிய ரஷ்ய பீரங்கி... பதபதைக்க வைக்கும் வீடியோ
ரஷ்யா- உக்ரைன்
Army tank ran over car: திட்டமிட்டே காரின் மீது பீரங்கி ஏறியது வீடியோ மூலம் தெளிவாகியுள்ளது. பீரங்கி ஏறியதால் கார் அப்பளம் போல் சுக்குநூறாக நொறுங்கியது.
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் கடும் தாக்குதலை நடத்திவரும் சூழலில், ரஷ்ய ராணுவ பீரங்கி (Tank) முதியவர் ஒருவர் சென்ற கார் மீது ஏறி சேதப்படுத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீரங்கி ஏறியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
ரஷ்யா- உக்ரைன் இடையே நீண்ட நாட்களாக பகை இருந்துவந்த நிலையில், அதிரடியாக உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது. அந்நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 4வது நாளாக இன்றும் தொடர்கிறது. பலம் வாய்ந்த ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் தீரத்துடன் போரிட்டு வருகின்றனர். உக்ரைன் தலைநகர் கிவ் பகுதியை ரஷ்ய படைகள் நெருங்கி வருகின்றன.
இந்த தாக்குதலில் உக்ரைன் தரப்பில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உக்ரைனை நோக்கி வந்த ராணுவ பீரங்கி ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றின் மீது ஏறியது. திட்டமிட்டே காரின் மீது பீரங்கி ஏறியது வீடியோ மூலம் தெளிவாகியுள்ளது. பீரங்கி ஏறியதால் கார் அப்பளம் போல் சுக்குநூறாக நொறுங்கியது.
காரை ஓட்டிவந்த முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தாலும், கார் உள்ளேயே சிக்கிக்கொண்டார். பின்னர் அங்கிருந்த நபர்கள் காரின் கதவுகளை உடைத்து முதியவரை காப்பாற்றினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
Published by:Murugesh M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.