Home /News /international /

Russia-Ukraine War: உக்ரேனுக்குள் 40 மைல் தொலைவுக்கு அணிவகுத்து செல்லும் ரஷ்ய ராணுவம் - போரை தீவிரப்படுத்த திட்டம்

Russia-Ukraine War: உக்ரேனுக்குள் 40 மைல் தொலைவுக்கு அணிவகுத்து செல்லும் ரஷ்ய ராணுவம் - போரை தீவிரப்படுத்த திட்டம்

உக்ரேனுக்குள் 40 மைல் தொலைவுக்கு அணிவகுத்து செல்லும் ரஷிய ராணுவம்

உக்ரேனுக்குள் 40 மைல் தொலைவுக்கு அணிவகுத்து செல்லும் ரஷிய ராணுவம்

Russia-Ukraine War: ரஷியா ஒருபக்கம் பேச்சுவார்த்தைக்கு தயார் என சொல்லிக் கொண்டே, மற்றொரு பக்கம் போரை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது.

ரஷ்யா - உக்ரேன் நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஐ.நா. அமைப்பும், உலக நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற சூழலில், அதற்கு பலன் கிடைப்பதாக தெரியவில்லை. ரஷ்யா ஒருபக்கம் பேச்சுவார்த்தைக்கு தயார் என சொல்லிக் கொண்டே, மற்றொரு பக்கம் போரை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது.

40 மைல் தொலைவுக்கு அணிவகுப்பு

உக்ரேனின் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்கள், சில குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்யா ஏற்கனவே தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், தற்போது இன்னும் கூடுதலான தாக்குதல்களை முன்னெடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. உக்ரேன் தலைநகர் கிவ் நகரில் எண்ணற்ற தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த நகரை நோக்கி 40 மைல் தொலைவுக்கு ரஷ்ய ராணுவம் அணிவகுத்து செல்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த சேட்டிலைட் இமேஜிங் நிறுவனம் ஒன்று இதுகுறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. மேக்ஸார் என்ற பெயர் கொண்ட அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த படங்களில் ரஷ்யாவின் டேங்கர்கள், போர் இயந்திரங்களை கொண்ட வாகனங்கள், படை வீரர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் உள்ளிட்டவை அணிவத்து செல்வது தெரியவந்துள்ளது.

கிவ் நகரில் இருந்து 18 மைல் தொலைவில் உள்ள அண்டோனோவ் விமான நிலையத்தில் இருந்து, ரைபிர்ஸிக் நகர் வரை, அதாவது 60 கி.மீ. தொலைவுக்கு இந்த அணிவகுப்பு நீள்கிறது. இவான்கிவ் நகரில் உள்ள வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டடங்கள் பற்றி எரிவது குறித்து சேட்டிலைட் இமேஜிங் மூலம் தெரியவந்துள்ளது என்று மேக்ஸார் நிறுவனம் தெரிவிக்கிறது.

கள நிலவரம் என்ன

ரஷ்யா அணிவகுத்து சென்றாலும், உக்ரேன் படையினர் மன உறுதியுடன் தடுத்து நிற்பதால், ரஷ்ய ராணுவத்தால் எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக முன்னேற இயலவில்லை. ரஷ்ய அரசு எதிர்பார்த்தைக் காட்டிலும் போரின் வேகம் குறைவாக இருக்கக் கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, உக்ரேனின் வான் எல்லையில், ரஷ்யா இன்னும் பெரிய அளவுக்கு முன்னேறவில்லை.

ரஷ்யா - உக்ரேன் பேச்சுவார்த்தை

பெலாரஸ் நாட்டை ஒட்டியுள்ள உக்ரேன் எல்லைப் பகுதியில் ரஷ்யா மற்றும் உக்ரேன் அதிகாரிகள் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர். எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் அந்தப் பேச்சுவார்த்தை உடனடியாக முடிவுக்கு வந்தது என்று உக்ரேன் அதிபர் விளாடிமிர் ஸெலனெஸ்கியின் மூத்த ஆலோசகர் மைகாய்லோ போடல்யாக் தெரிவித்தார்.

Also read... ரஷ்யா - உக்ரைன் பிரச்னைக்கு என்ன தீர்வு? ஐநாவில் இந்தியா விளக்கம்

உக்ரேன் சார்பில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் இதர மூத்த அதிகாரிகள் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். ரஷ்யா சார்பில், அதிபர் புடினின் கலாசாரப் பிரிவு ஆலோசகர் விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இவர் போர் நிறுத்தம் செய்வதற்கு எதிரான கருத்து கொண்டவர். இதில் இருந்தே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது தெரிகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி