ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியது. அந்த போர், சுமார் 10 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த, கடும் போரில் உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் சேதமடைந்துள்ளன. பொதுமக்கள் வாழும் பகுதிகளிலும் ரஷ்யா ஏவுகனைத் தாக்குதல் நடத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையும் மற்ற உலக நாடுகளும் குற்றம் சாட்டி வந்தாலும் ரஷ்யா அதை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
ரஷ்யாவின் ஏவுகனை தாக்குதல்களால் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் வாழவே தகுதியற்ற நிலையில் உருக்குலைந்துள்ளது. மருத்துவமனைகள் கூட தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன.
மேலும் மின் நிலையங்களும் தகர்க்கப்பட்டுள்ளதால் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் இருளுக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் வசிக்கும் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் ரஷ்ய ராணுவம் மிக மோசமான தாக்குதலை நடத்தியது.
தென்கிழக்கு நகரமான நீப்ரோ நகரில் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆயிரத்து 700 பேர் வசித்து வந்ததாகவும், அவர்களில 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 75க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை ரஷ்யா பொதுமக்கள் மீது நடத்திய மிக மோசமான தாக்குதல் இது என மேற்குலக நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. ரணுவத்தினர் யாரும் இல்லாத, பொதுமக்கள் மட்டுமே வசிக்கும் கட்டடத்தில் தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்ய திட்டவட்மாக மறுத்துள்ளது.
இந்நிலையில் , உக்ரைன் நாட்டில் தற்போது வரை போரில் அப்பாவி பொதுமக்கள் 7,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், போர் தொடங்கப்பட்ட கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் கடந்த 26 ஆம் தேதி வரை குழந்தைகள், பெண்கள் உட்பட 6884 நபர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 10,947 பேருக்கு பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
போரை நிறுத்த பல்வேறு நாட்டுத் தலைவர்களும் வற்புறுத்தி வரும் நிலையிலும் புதின் செவிசாய்க்கவில்லை. பத்து மாதங்களுக்கும் மேல் நடைபெற்று வரும் இந்தப் போரில் உக்ரைன் மிக மோசமாக சேதமடைந்துள்ளது. தொடர் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்தும் உக்ரைனுக்கு ராணுவ ரீதியிலான உதவிகளை வழங்கியுள்ளது. இதையடுத்து ரஷ்யா இங்கிலாந்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்ய-உக்ரைன் போரால் பல்வேறு நாடுகளில் குறிப்பாக ஆப்பரிக்க நாடுகளில் இப்போதே உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும், போர் நீடிக்குமானால் நிலைமை இன்னும் மோசமாகும் என்றும் ஐநா அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Russia, Russia - Ukraine, Tamil News, Vladimir Putin