முகப்பு /செய்தி /உலகம் / டாலரில் கடனை செலுத்த முடியவில்லையா? ரஷ்யா திவாலாகிறது என்றே கருதுவோம் - மூடீஸ் எச்சரிக்கை

டாலரில் கடனை செலுத்த முடியவில்லையா? ரஷ்யா திவாலாகிறது என்றே கருதுவோம் - மூடீஸ் எச்சரிக்கை

ரஷ்ய அதிபர் புடின்

ரஷ்ய அதிபர் புடின்

உக்ரைன் - ரஷ்யா போருக்கு மத்தியில், ரஷ்யாவின் ரூபிள் மதிப்பானது வலுவிழந்து காணப்படுகின்றது, மேலும் பொருளாதாரத் தடைகளினால் அன்னியச் செலாவணி கரன்சியில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அனைத்தையும் தன் நாட்டு கரன்சியான ரூபிள்களிலேயே ரஷ்யா கையாள்வதால் விரைவில் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் டீஃபால்ட் ஆகிவிடும் என்று ரேட்டிங் நிறுவனம் மூடீஸ் எச்சரித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உக்ரைன் - ரஷ்யா போருக்கு மத்தியில், ரஷ்யாவின் ரூபிள் மதிப்பானது வலுவிழந்து காணப்படுகின்றது, மேலும் பொருளாதாரத் தடைகளினால் அன்னியச் செலாவணி கரன்சியில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அனைத்தையும் தன் நாட்டு கரன்சியான ரூபிள்களிலேயே ரஷ்யா கையாள்வதால் விரைவில் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் டீஃபால்ட் ஆகிவிடும் என்று ரேட்டிங் நிறுவனம் மூடீஸ் எச்சரித்துள்ளது.

மே 4 ஆம் தேதி கருணைக் காலத்தின் முடிவில் இரண்டு பத்திரங்களை அமெரிக்க டாலர்களில் செலுத்தாவிட்டால் ரஷ்யா “கடனைத் திருப்பிச் செலுத்த முடியா திவால் நிலை என்று மூடிஸ் முதலீட்டாளர்கள் கருத வேண்டியிருக்கும் என்று வியாழக்கிழமை கூறியது.

உக்ரைன் மீதான மாஸ்கோ படையெடுப்பைத் தொடர்ந்து உலக நிதிய அமைப்பில் இருந்து நாட்டைத் துண்டித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்துவதிலிருந்து தடுக்கப்பட்ட பின்னர் மாஸ்கோ அதன் கடனைச் செலுத்த ரூபிள்களில் செலுத்தி வருகிறது, இது உள்நாட்டு பொருளாதார சீர்க்கேட்டுக்கே வழிவகுக்கும்.

ஆனால் 2022 மற்றும் 2042 ஆம் ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் இரண்டு வெளிநாட்டு நாணயப் பத்திரங்களுக்கான தொகையை கருணை நாள் கடைசி நாளான ஏப்ரல் 4ம் தேதி செலுத்துவதென்பது, பேமெண்ட் விதிமுறைகளில் மாற்றத்தைக் குறிக்கிறது... எனவே மே 4 ஆம் தேதிக்குள் இந்த நிலை சரிக்கட்டப்பட வேண்டும் இல்லையெனில் மூடிஸ் வரையறையின் கீழ் இது டீஃபால்ட் அல்லது கடனைத் திருப்பிச் செலுத்த முடியா திவால் நிலையாகக் கருதப்படலாம்" என்று மதிப்பீடு நிறுவனம் தெரிவித்துள்ளது.

"பத்திர ஒப்பந்தங்களில் டாலர்களைத் தவிர வேறு எந்த நாணயத்திலும் திருப்பிச் செலுத்துவதற்கான ஏற்பாடு இல்லை" என்று மூடிஸ் கூறியது. பத்திர தாரர்களுக்கு அமெரிக்க டாலர்களில் செலுத்தாததால் S&P குளோபல் ரேட்டிங்ஸ் ரஷ்யாவை "தேர்ந்தெடுக்கப்பட்ட டீஃபால்ட்" என்று அறிவித்தது.

கடந்த வாரம், வாஷிங்டன் மாஸ்கோவை அமெரிக்க வங்கிகள் வைத்திருக்கும் டாலர்களைப் பயன்படுத்தி கடன் செலுத்துவதைத் தடை செய்தது.

ரஷ்ய நிதி அமைச்சகம், ஏப்ரல் 4 ஆம் தேதி நிலுவையில் உள்ளதால் வெளிநாட்டுக் கடன் வைத்திருப்பவர்களுக்கு ரூபிள்களில் சுமார் 650 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த வார தொடக்கத்தில் நிதியமைச்சர் அன்டன் சிலுவானோவ், அரசாங்கம் கடனைச் செலுத்துவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதால் கடனை திருப்பிச் செலுத்த திராணியற்றது என்று முடிவெடுத்தால் கோர்ட்டுக்குச் செல்வோம் என்கிறது ரஷ்யா.

First published:

Tags: Business, Russia - Ukraine, US dollar