உயிரை துச்சமென கருதி சரணடைய மறுத்ததால் ரஷ்ய படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட, உக்ரைனை சேர்ந்த 13 வீரர்களின் உயிர் தியாகம் பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.
போர் தொடுத்த பலம் பொருந்தியரஷ்ய ராணுவத்தை எதிர்த்து சிறிய நாடான உக்ரைனின் ராணுவ வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். இருதரப்பின் ராணுவ பலத்திற்கும் பெரிய அளவிலான வித்தியாசம் இருந்தாலும், தாய் நாட்டை காப்பதில் உக்ரைன் வீரர்களின் உத்வேகம், ஆச்சயர்த்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், உக்ரைனின் தென் கிழக்கு பகுதியில், கருங்கடலில் 40 ஏக்கர் பரப்பளவை கொண்ட சின்னஞ்சிநிய பாம்புத் தீவை ரஷ்ய போர்க் கப்பல் முற்றுகை இட்டது. அப்போது, உயிர் சேதத்தை தவிர்க்க ஆயுதங்களை துறந்து சரணடையுமாறும், மறுத்தால் தாக்கப்படுவீர்கள் என்றும் ரேடியோ மூலம் ரஷ்ய போர் கப்பல் கேப்டன் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க - உக்ரைன் ராணுவத்தை துவம்சம் செய்யத் தொடங்கிய ரஷ்யா... நவீன ஏவுகனைகள் மூலம் அதிரடி தாக்குதல்
அங்கு எண்ணிக்கையில் குறைந்த அளவே உக்ரைன் வீரர்கள் இருந்துள்ளனர். போரிட்டாலும் தீவை காக்க முடியாது என அவர்கள் உணர்ந்தே இருக்கின்றனர். ஆனாலும் உயிருக்கு அஞ்சாமல், சரணடைய மறுத்த உக்ரைன் வீரர்கள், ரேடியோவில் ரஷ்ய படையினரை, GO TO HELL போன்ற கடுமையான வார்த்தைகளை கொண்டு திட்டியுள்ளனர்.
அதைதொடர்ந்து, அந்த தீவின் மீது தாக்குதல் நடத்தும் ஒலிநாடாவை, உக்ரைன் அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, பாம்பு தீவை ரஷ்ய கப்பல் பீரங்கி குண்டுகளால் தாக்கியதில், 13 உக்ரைன் வீரர்கள் வீர மரணம் அடைந்ததாகவும், அவர்கள் தியாகத்தை போற்றி Hero of Ukraine பதக்கம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதேசமயம், பாம்பு தீவை எந்தவித எதிர்ப்பும் இன்றி, உக்ரைன் வீரர்கள் தாமாக முன்வந்து தங்களிடம் ஒப்படைத்து விட்டதாக, ரஷ்யா விளக்கமளித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.