Home /News /international /

ரஷ்யா - உக்ரைன் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை

ரஷ்யா - உக்ரைன் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா - உக்ரைன் போர்

பெலாரஸில் இரண்டு முறையும், துருக்கியில் ஒருமுறையும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான நான்காம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இரண்டு வாரங்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதனால் இதுவரை 28 லட்சம் பேர் அகதிகளாக உக்ரைனில் இருந்து புலம்பெயர்ந்துள்ளனர். இந்தநிலையில் இருநாடுகள் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக, நான்காம் கட்ட பேச்சுவார்த்தை காணொலி வாயிலாக நேற்று தொடங்கியது. ஏற்கனவே பெலாரஸில் இரண்டு முறையும், துருக்கியில் ஒருமுறையும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்தநிலையில் நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் உக்ரைன் தரப்பில் கலந்துகொண்ட மிக்கைலோ போடோலியாக், பேச்சுவார்த்தை மீண்டும் இன்று நடைபெறும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக பேசிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, பேச்சுவார்த்தைகள் கடினமாக இருந்ததாக குறிப்பிட்டார்.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Russia - Ukraine, Vladimir Putin, War

    அடுத்த செய்தி