Home /News /international /

ரஷ்யா - உக்ரைன் இடையிலான சமாதான பேச்சுவார்த்தை ஆன்லைனில் மீண்டும் தொடங்கியது...

ரஷ்யா - உக்ரைன் இடையிலான சமாதான பேச்சுவார்த்தை ஆன்லைனில் மீண்டும் தொடங்கியது...

உக்ரைனில் ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.

உக்ரைனில் ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.

ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக சமாதான பேச்சுவார்த்தை ஆன்லைனில் மீண்டும் தொடங்கியுள்ளது.

துருக்கி நாடு மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில் இந்த பேச்சு வார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக துருக்கி தலைநகர் இஸ்தான்பூலில், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, கீப் மற்றும் செர்னிகிவ் பகுதிகளில் ரஷ்யா படைக்குவிப்பை குறைத்துக் கொள்ளும் என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க - இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டுக்கு கொரோனா தொற்று உறுதி

இந்த நிலையில் அடுத்த கட்டமாக இரு நாட்டு பிரதிநிதிகள் ஆன்லைனில் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நேற்று உக்ரைனின் டினிப்ரோ பெட்ரோஸ்க் ராணுவ தளத்தின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தினர். இதேபோன்று கார்கிவ் பகுதியிலும் தொடர்ந்து ரஷ்யா குண்டுகளை வீசி வருகிறது.

இதையும் படிங்க - ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் இருந்து 40 லட்சம் பேர் வெளியேற்றம்... ஐ.நா. தகவல்

தலைநகர் கீவில் உள்ள பள்ளி மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் பள்ளி முற்றிலும் சிதைந்துள்ளது. ஒருபக்கம் சமாதான பேச்சுவார்த்தை முயற்சிகள் நடத்தப்பட்டாலும், இன்னொருபக்கம் ரஷ்யா அதிரடி தாக்குதல் நடத்தி முன்னேறி வருவதால், பதற்றம் அதிகரித்துள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி