ஹோம் /நியூஸ் /உலகம் /

உக்ரைன் - ரஷ்யா பதற்றம் : போலந்திற்கு கூடுதலாக 3 ஆயிரம் வீரர்களை அனுப்பியது அமெரிக்கா

உக்ரைன் - ரஷ்யா பதற்றம் : போலந்திற்கு கூடுதலாக 3 ஆயிரம் வீரர்களை அனுப்பியது அமெரிக்கா

சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இவை வரும் 20-ம்தேதி முடிவுக்கு வரவுள்ள நிலையில், அதன்பின்னர் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், நேட்டோ படைகளுக்கு உதவியாக 3 ஆயிரம் வீரர்களை அமெரிக்கா போலந்து நாட்டிற்கு அனுப்பியுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்னை இருந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து வருகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையில் முகாமிட்டிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

இதையும் படிங்க - ''உக்ரைனை விட்டு வெளியேறுங்கள்'' - அமெரிக்கர்களுக்கு அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டில் உள்ள அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்த பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், ரஷ்யா தனது முடிவில் சற்றும் இறங்காமல் இருப்பதால் அந்நாடு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று சர்வதேச பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.

இதையும் படிங்க - 'வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பேராசிரியர்கள், ஆப்கன் நலன்கருதி நாடு திரும்ப வேண்டும்' - தலிபான்கள் கோரிக்கை

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ படைகளுக்கு வலு சேர்ப்பதற்காக, அமெரிக்கா தனது படைகளை அனுப்பி வருகிறது. அந்த வகையில் 3 ஆயிரம் வீரர்களை அமெரிக்கா, போலந்து நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.

உக்ரைன் நாட்டிற்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவாக இருப்பதால் இந்த விவகாரம் சர்வதேச பிரச்னையாக மாறத் தொடங்கியுள்ளது.

ஒருவேளை ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் அந்நாட்டின்மீது நேட்டோ படைகள் தாக்குதல் தொடுக்கலாம். அல்லது ராணுவ பலத்தை அதிகரித்து, ரஷ்யாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் ஈடுபடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இவை வரும் 20-ம்தேதி முடிவுக்கு வரவுள்ள நிலையில், அதன்பின்னர் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

First published:

Tags: NATO Force, Russia, Russia - Ukraine