Home /News /international /

உக்ரைன் ராணுவத்தை துவம்சம் செய்யத் தொடங்கிய ரஷ்யா... நவீன ஏவுகனைகள் மூலம் அதிரடி தாக்குதல்

உக்ரைன் ராணுவத்தை துவம்சம் செய்யத் தொடங்கிய ரஷ்யா... நவீன ஏவுகனைகள் மூலம் அதிரடி தாக்குதல்

ராணுவ தளவாடங்களை குறிவைத்துதான் தாக்குதல் நடத்துவதாகவும், பொதுமக்களை தாக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் ரஷ்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ராணுவத்தை குறிவைத்து ரஷ்யா ஏவுகனைத் தாக்குதலை இன்று தொடங்கியுள்ளது. இதில் நவீன ரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போரை அறிவித்துள்ளது. அந்நாடு சமாதான பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வந்தாலும், அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

மறுபக்கம் உக்ரைன் நாட்டிற்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டத் தொடங்கியுள்ளன. ஸ்வீடன் ராணுவ உதவிகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், பிரான்சும் ராணுவ உதவியை அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதையும் படிங்க - அணு ஆயுதத்தை கையில் எடுப்பேன்... மிரட்டல் விடுத்த ரஷ்ய அதிபர்

ரஷ்யாவின் விடாப்பிடியைப் பார்க்கும்போது, இந்தப்போரில் இன்னும் சில வல்லரசு நாடுகளும் ஈடுபடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தாக்குதல் ஆரம்பித்த நேற்று முன்தினத்தில் இருந்து தற்போது முதன்முறையாக, நவீன ரக ஏவுகனைகளை ரஷ்யா பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. தரை மற்றும் கடற்பரப்பில் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவுகனைகளை பயன்படுத்தி, உக்ரைன் ராணுவம் மீது நேற்று நள்ளிரவு தாக்குதல் நடந்துள்ளது.

இதில் உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான 800-க்கும் அதிகமான உபகரணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 14 சிறிய விமானப்படைத் தளங்கள், 19 எல்லை பாதுகாப்பு நிலைகள், எஸ் 300 ரகத்தை சேர்ந்த 24 ஏவுகணைகள், 48 ரேடார்கள், 7 இலகு ரக போர் விமானங்கள், 7 ஹெலிகாப்டர்கள், 9 ஆளில்லா தாக்குதல் விமானங்கள், 87 டாங்க்குகள் மற்றும் 28 ராக்கெட் லாஞ்சர்கள் அடங்கும்.

இதையும் படிங்க - எனது குடும்பத்தை கொல்ல திட்டமிட்டுள்ளனர்... உக்ரைன் தனித்து விடப்பட்டுள்ளது... அதிபர் செலன்ஸ்கி வேதனை

ராணுவ தளவாடங்களை குறிவைத்துதான் தாக்குதல் நடத்துவதாகவும், பொதுமக்களை தாக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் ரஷ்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் ஏதும் இல்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி