உக்ரைன் நாட்டின் நிலவரம் மற்றும் அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பு குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த விவகாரங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளிப்படையாக எந்தக் கருத்தும் கூற வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்து வரும் நிலையில் நேற்றிலிருந்து தாக்குதல் நடத்ததத் தொடங்கி விட்டது. அங்குள்ள பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருவதாகவும், ரஷ்ய ராணுவத்திற்கு பொதுமக்கள் இலக்கு அல்ல என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பகுதியளவு கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் டோனட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பகுதிகளை சுதந்திர பகுதியாக ரஷ்யா அறிவித்துள்ளது. முன்பு சோவியத் யூனியனில் அங்கம் வகித்த உக்ரைன், தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இது தங்களுக்கு அச்சுறுத்தல் என்று கூறி ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க -
உக்ரைன்-ரஷ்ய தலைவர்களிடம் பேசி போரை உடனடியாக நிறுத்த பிரதமர் மோடியிடம் கோரிக்கை
ரஷ்யா போரை நடத்தக்கூடும் என்று முன்னரே இந்திய அதிகாரிகள் கணித்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் முன்னரே அங்கிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்புமாறு தூதரகம் கேட்டுக் கொண்டது. பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், ரஷ்யா திடீரென தாக்குதல் நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இதையும் படிங்க -
Ukraine War LIVE Updates: 5 ரஷ்ய விமானங்கள், ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினோம்- உக்ரைன் அறிவிப்பு
தற்போது, உக்ரைன் கள நிலவரம் மற்றும் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வெளியுறவு, உளவுத்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். போரை நிறுத்தும் நடவடிக்கையாக ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா - ரஷ்யா இடையே கடந்த சில தசாப்தங்களாக நல்லுறவு இருந்து வருகிறது. உக்ரைனும் இந்தியாவுடன் நல்லுறவு பேணி வருவதால், இந்த விவகாரத்தில் இந்தியா முக்கிய பங்கை வகிக்கலாம் என்று சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.