Home /News /international /

ரஷ்யா தாக்குதல்.. கூட்டம், கூட்டமாக நாட்டை விட்டு வெளியேறும் உக்ரைன் மக்கள்.. அரங்கேறும் அவலம்..

ரஷ்யா தாக்குதல்.. கூட்டம், கூட்டமாக நாட்டை விட்டு வெளியேறும் உக்ரைன் மக்கள்.. அரங்கேறும் அவலம்..

நாட்டை விட்டு வெளியேறும் உக்ரேன் மக்கள்

நாட்டை விட்டு வெளியேறும் உக்ரேன் மக்கள்

பெரும்பாலான பெண்கள், குழந்தைகளுடன் எல்லைகளை கடந்து செல்கின்றனர். குறிப்பாக, கடும் பனி சூழ்ந்துள்ள நிலையில், பல மணி நேரம் காத்திருந்த பிறகு பொதுமக்கள் எல்லையை கடக்கின்றனர்.

உலக நாடுகளின் நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகளுக்கு இடையே, உக்ரேன் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை தொடங்கி போர் நடத்தி வருகிறது. போர் தொடங்கிய 2 நாட்களுக்குள்ளாக உக்ரேனில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐ.நா. அமைப்பின் அகதிகள் பிரிவு தலைவர் தெரிவிக்கிறார். உள்நாட்டிலேயே ஒரு லட்சம் மக்கள், சொந்த இடங்களை விட்டுவிட்டு, வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா. தெரிவிக்கிறது. நாட்டை விட்டு வெளியேறும் மக்கள், அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து, ஐ.நா. அகதிகள் பிரிவு தலைவர் பிலிப்போ கிராண்ட்லி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “உக்ரேனில் இருந்து 48 மணி நேரத்திற்குள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பெரும்பாலான மக்கள் போலந்து மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இன்னும் ஏராளமான மக்கள், நாட்டின் எல்லையை நோக்கி நகர்ந்து வருகின்றனர். நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாக வரும் மக்களை வரவேற்கும் வகையில், எல்லைகளை திறந்து வைத்திருக்கும் நாடுகளின் மக்களுக்கும், அங்குள்ள அரசுகளுக்கும் இதயம் கனிந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று, ரொமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாகியா ஆகிய நாடுகளிலும் உக்ரேன் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

போர் நடைபெறும் சூழலில், நாட்டில் உள்ள இளம் வயது ஆண்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும், அவர்கள் ராணுவ நடவடிக்கைகளில் பங்கெடுக்க வேண்டும் என்றும் உக்ரேன் அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இத்தகைய சூழலில், பெரும்பாலான பெண்கள், குழந்தைகளுடன் எல்லைகளை கடந்து செல்கின்றனர். குறிப்பாக, கடும் பனி சூழ்ந்துள்ள நிலையில், பல மணி நேரம் காத்திருந்த பிறகு பொதுமக்கள் எல்லையை கடக்கின்றனர்.

Also read... Russia-Ukraine Crisis: அணு ஆயுதங்களை பயன்படுத்துவதாக ரஷ்யா மிரட்டல் - ஐநா அவசர கூட்டத்தில் கண்டனம்

தனது 2 பெண் குழந்தைகளுடன் ஐரினா என்ற 36 வயது பெண், ஸ்லோவோகியா நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது கணவரை நாங்கள் அங்கேயே (உக்ரேன்) விட்டுவிட்டு வந்துள்ளோம். எங்கள் அரசுக்கு ஆதரவாக அவர் தொடர்ந்து அங்கேயே உள்ளார். உக்ரேனுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என நம்புகிறோம்’’ என்று குறிப்பிட்டார்.

உக்ரேனின் பெரும்பகுதி எல்லையை ஒட்டி அமைந்துள்ள போலந்து நாட்டுக்குள் தஞ்சம் அடைய 1 மில்லியன் மக்கள் புறப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லையை கடப்பதற்காக சுமார் 6 முதல் 12 மணி நேரம் வரையில் காத்திருக்கின்றனர். போர் தொடர்ந்து நீடித்தால் உக்ரேனில் இருந்து 5 மில்லியன் மக்கள் வெளியேறக் கூடும் என்று ஐ.நா. மற்றும் அதன் சார்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி