Home /News /international /

Russia - Ukraine : வயது வந்த ஆண்கள் அனைவரும் ரஷ்யாவை எதிர்த்து போரில் ஈடுபட உக்ரைன் அரசு அதிரடி உத்தரவு

Russia - Ukraine : வயது வந்த ஆண்கள் அனைவரும் ரஷ்யாவை எதிர்த்து போரில் ஈடுபட உக்ரைன் அரசு அதிரடி உத்தரவு

Russia - Ukraine War: கிழக்கு உக்ரைன் பகுதியில் நேற்று ரஷ்ய ராணுவம் குண்டுகளை வீசி நேற்று தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து உக்ரைனில் பதற்றம் பெருமளவு அதிகரித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிலையில் உக்ரைனில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்கள் விரைவில் அந்நாட்டை விட்டு வெளியேறி விடுமாறு உக்ரைன் கேட்டுக் கொண்டுள்ளது.

கிழக்கு உக்ரைன் பகுதியில் நேற்று ரஷ்ய ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து உக்ரைனில் பதற்றம் பெருமளவு அதிகரித்துள்ளது. தொடர்ந்து மிகப்பெரிய தாக்குதலை ரஷ்யா நடத்துமா என்பது இன்னும் உறுதி செய்யப்பபடவில்லை. இதுகுறித்து தங்களால் எதுவும் சொல்ல முடியாது என்று கூறியுள்ள உக்ரைன் அதிபர் வோலேடைமிர் செலன்ஸ்கி, குடிமக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளார்.

இதன் அடிப்படையில் உக்ரைனில் 30 நாட்கள் அவசர நிலையை ஏற்படுத்த நாடாளுமன்றத்தில் செலன்ஸ்கி தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒருமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றிலிருந்து அடுத்த 30 நாட்களுக்கு உக்ரைனில் எமர்ஜென்ஸி கடைபிடிக்கப்படவுள்ளது.

போரை எதிர்கொள்ள முக்கிய நடவடிக்கையாக, வயது வந்த ஆண்கள் அனைவரும், போரிலும், ராணுவ பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்று உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்பதை உறுதி செய்யும் விதமாக, உக்ரைனில் உள்ள ரஷ்ய தூதரகம் நேற்று மூடப்பட்டு அங்கிருக்கும் அதிகாரிகள் ரஷ்யாவுக்கு திருப்பி அழைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க - War In Ukraine : உக்ரைனுடன் ரஷ்யா போர்- போலந்தில் அமெரிக்க படைகள் குவிப்பு

முன்னாள் சோவியத் யூனியனில் அங்கம் வகித்த நாடு நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா தாக்குதல் தொடுத்து வருகிறது. இவ்வாறு உக்ரைன் நேட்டோவுடன் இணையும்போது, அது தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று ரஷ்யா கருதுகிறது.

இதையும் படிங்க -உக்ரைனில் உள்ள தூதரகத்தைக் காலி செய்தது ரஷ்யா- உச்சக்கட்ட போர் பதற்றம் | Russia's war in Ukraine:

இதேபோன்று உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் பெரும்பாலானவற்றை பிரிவினைவாத குழுக்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அவர்களுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது.

இதன் அடிப்படையில் உக்ரைன் ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ள லுகான்ஸ்க் மற்றும் டன்ஸ்ட்க் பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் குண்டுமழை பொழிந்துள்ளன. இவ்விரு பகுதிகளையும், தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருப்பதால் அப்பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்கள் கடும் தீவிரத்துடன் உக்ரைனை எதிர்த்து வருகின்றனர்.
Published by:Musthak
First published:

Tags: Russia, Russia - Ukraine

அடுத்த செய்தி