Home /News /international /

"உக்ரைன் மீதான போரை நிறுத்துங்கள்": ரஷ்ய அதிபர் புதினுக்கு நடிகர் அர்னால்டு கோரிக்கை

"உக்ரைன் மீதான போரை நிறுத்துங்கள்": ரஷ்ய அதிபர் புதினுக்கு நடிகர் அர்னால்டு கோரிக்கை

Russia-Ukraine crisis | ரஷ்ய ராணுவ வீரர்களுக்காக அர்னால்டு வெளியிட்டுள்ள 9 நிமிட வீடியோவில், புடினையும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Russia-Ukraine crisis | ரஷ்ய ராணுவ வீரர்களுக்காக அர்னால்டு வெளியிட்டுள்ள 9 நிமிட வீடியோவில், புடினையும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Russia-Ukraine crisis | ரஷ்ய ராணுவ வீரர்களுக்காக அர்னால்டு வெளியிட்டுள்ள 9 நிமிட வீடியோவில், புடினையும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

    உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு பிரபல ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

    உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையிலும் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. சிறிய நகரங்கள், முக்கியமான வர்த்தக பகுதிகள், தலைநகர் கீவ் என மும்முனை தாக்குதலை ரஷ்ய ராணுவம் தொடங்கியுள்ளது.

    தலைநகர் கீவில் 15 மாடிகள் கொண்ட குடியிருப்பு மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் கட்டடம் தீப்பிடித்து எரிந்தது. தீயில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு விரைந்த மீட்பு படை வீரர்கள், கட்டடத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதேபோல் பொடில் ஸ்கை, டர்னிட் ஸ்கை உள்ளிட்ட பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

    குடியிருப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், கீவ் நகரில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மரியுபோல் நகரிலிருந்து நேற்று ஒரே நாளில் 4 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நடைபெறும் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

    பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை: ரூ.7,500 கோடி கடன் வழங்கும் இந்தியா!

    தொடர்ந்து, நிப்ரோ நகரில் உள்ள விமான நிலையத்தின் மீது ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தியதாகவும் உக்ரைன் அறிவித்துள்ளது. போருக்கு அஞ்சி உக்ரைனிலிருந்து இதுவரை 30 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக ரஷ்ய ராணுவ வீரர்களுக்காக அர்னால்டு வெளியிட்டுள்ள 9 நிமிட வீடியோவில், புடினையும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.



    இது சட்ட விரோதமான போர், உலகமே கண்டிக்கும் இந்த போரில் உங்கள்(ரஷ்ய ராணுவ வீரர்களின்) வாழ்க்கை, உங்கள் எதிர்காலத்தினை தியாகம் செய்கிறீர்கள். கிரெம்லின் மாளிகையில் ஆட்சியில் உள்ளவர்களை கேட்கிறேன், உங்கள் சொந்த இலக்குக்காக ஏன் இளம் வீரர்களை தியாகம் செய்கிறீர்கள், இதை கேட்கும் வீரர்களே, 1 கோடியே 10 லட்சம் ரஷ்யர்களின் சொந்தங்கள் உக்ரைனில் உள்ளனர். நீங்கள் சுடும் ஒவ்வொரு தோட்டாவும் உங்கள் சகோதர சகோதரிகளை சுடுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ரஷ்யா தான் இந்த இந்தப் போரைத் தொடங்கியது. இது ரஷ்ய மக்களின் போர் அல்ல. இந்தப் போரைத் நீங்கள் தான் தொடங்கினீர்கள். நீங்கள் தான் இந்தப் போரை முன் எடுத்து செல்கிறீர்கள். நீங்கள் நினைத்தால் இந்தப் போரை உங்களால் நிறுத்த முடியும் என்று அவர் அதிபர் புதினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Russia, Russia - Ukraine, Vladimir Putin

    அடுத்த செய்தி