Home /News /international /

உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு 17 நாடுகள் அதிரடி தடை விதிப்பு...

உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு 17 நாடுகள் அதிரடி தடை விதிப்பு...

ஒவ்வொரு நாளாக ரஷ்யா மீது உலக நாடுகள் விதிக்கும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனை ரஷ்யாவின் நட்பு நாடான சீனாவால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.

உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதன்மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவின் விமானங்கள் பறப்பதற்கு 17 நாடுகள் அதிரடி தடை விதித்துள்ளது. நாளுக்கு நாள் உலக நாடுகள் ரஷ்யா மீது கொடுக்கும் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.

ரஷ்யாவின் ஆதிக்கப் போக்கை கண்டிக்கும் விதமாக அந்நாட்டு அரசு ஊடகங்களின் கணக்குகளை சமூக வலைதளமான ஃபேஸ்புக் முடக்கியுள்ளது. ரஷ்யா மீது தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இவ்வாறு சர்வதேச அளவில் ரஷ்யாவுக்கு சிறிது சிறிதாக நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.

உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சர்வதேச ஜூடோ தற்காப்புக்கலை அமைப்பின் கவுரவ தலைவர் பதவி, ரஷ்ய அதிபரிடம் இருந்து இன்று பறிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - அணு ஆயுத படையை தயார் நிலையில் இருக்க உத்தரவிட்ட புதின் - அச்சத்தில் உலக நாடுகள்

அடுத்த கட்ட நடவடிக்கையாக,
1) பிரிட்டன்
2) அயர்லாந்து
3) பின்லாந்து
4) பெல்ஜியம்
5) லாட்வியா
6) எஸ்டோனியா
7) லிதுவேனியா
8) போலந்து
9) பல்கேரியா
10) செக் குடியரசு
11) மால்டோவா
12) ருமேனியா
13) ஸ்லோவேனியா
14) பிரான்ஸ்
15) இத்தாலி
16) ஆஸ்திரியா
17) ஜெர்மனி
ஆகிய 17 நாடுகள் ரஷ்ய விமானங்கள் தங்கள் நாட்டின் வான் பகுதியில் பறப்பதற்கு தடை விதித்துள்ளன. ஒவ்வொரு நாளாக ரஷ்யா மீது உலக நாடுகள் விதிக்கும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனை ரஷ்யாவின் நட்பு நாடான சீனாவால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.

இதையும் படிங்க - உக்ரைனில் இருக்கும் இந்தியர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது இந்திய தூதரகம்

இதற்கிடையே, பெலாரஸ் நாட்டில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால் அந்நாட்டின் மீதான தாக்குதல் முடிவுக்கு வருமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முன்னதாக, பெலாரஸ் நாடு ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கூறி, பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைன் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவம் கருதி உக்ரைன் தரப்பில் பங்கேற்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி