Home /News /international /

ரஷ்ய அதிபர் புடின் உடன் பேச்சுவார்த்தைக்கு சம்மதம்: ஆனால் இங்கு தான் சந்திப்பு... இடத்தை அறிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

ரஷ்ய அதிபர் புடின் உடன் பேச்சுவார்த்தைக்கு சம்மதம்: ஆனால் இங்கு தான் சந்திப்பு... இடத்தை அறிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Zelenskyy Proposes Meeting Putin: ரஷ்யா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகளும் முயற்சி செய்துவருகின்றன. இந்நிலையில், புதின் உடன் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்:

    உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் சூழலில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று உக்ரைன்  அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்புக்கான இடத்தையும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

    உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா 18வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. அந்நாட்டின் முக்கிய இடங்களை குறிவைத்து தீவிர தாக்குதலை ரஷ்ய படைகள் முன்னெடுத்து வருகின்றன. தலைநகா் கீவை சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்ய படை தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. கீவின் வடமேற்கில் சண்டை தொடா்ந்து வருவதாகவும், கீவிலிருந்து 25 கிலோ மீட்டர். தொலைவில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த போரில்  579 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 1000 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 42 பேர் குழந்தைகள் ஆவர். 54 குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர். 25 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உக்ரைன் மீது படையெடுத்துள்ள  ரஷ்யாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உலக நாடுகள், பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கையில் இறங்கியுள்ளன.  அதேவேளையில், இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற முயற்சியிலும் ஒருசில நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

    இதையும் படிங்க: உக்ரைனில் குண்டு மழை பொழியும் ரஷ்யா - மரியுபோல் நகரில் கொல்லப்பட்ட 1,300 அப்பாவி பொதுமக்கள்


    உக்ரைன் - ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில்  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

    மேலும் படிக்க: ஒரு பர்க்கர் விலை ரூ.26,000... கடைசியாக ருசி பார்க்க மெக்டோனால்ட்ஸ் வாசலில் காத்திருக்கும் ரஷ்ய மக்கள்!


    இஸ்ரேல் பிரதமர் நஃபதலி பென்னெட் மத்தியஸ்தனத்தின் கீழ் ஜெருசலேமில் இந்த சந்திப்பை வைத்துக்கொள்ளலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Israel, Russia - Ukraine, Vladimir Putin

    அடுத்த செய்தி