Home /News /international /

'உக்ரைன் அதிபரிடம் நேரடியாக பேசுங்கள்' : ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

'உக்ரைன் அதிபரிடம் நேரடியாக பேசுங்கள்' : ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

இந்தியர்களை பத்திரமாக வெளியேற்றுவதற்கு ரஷ்யா தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று புதினிடம் கேட்டுக் கொண்டார்.

போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நேரடியாக பேசுமாறு, ரஷ்ய அதிபரை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த மாதம் 24-ம்தேதி போர் தொடங்கியது. அதன்பின்னர் இரு நாட்டு அதிபர்களுடனும் பிரதமர் மோடி 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐநா அவசர பொதுக்கூட்டத்தின்போது ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுதொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. தீர்மானத்தின்போது ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு எதிரான தீர்மானத்தை முறியடித்தது.

இந்நிலையில் இன்று காலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் மோடி பேசினார். சுமார் 35 நிமிடங்கள் நீடித்த உரையாடலின்போது போர் நிறுத்தம், பிரச்னையை சுமுகமாக பேசி தீர்ப்பது உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்தியர்களை மீட்க உதவி வரும் உக்ரைன் அரசுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்த பிரதமர் மோடி, எஞ்சியுள்ளவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். குறிப்பாக பதற்றம் அதிகம் காணப்படும் சுமி நகரில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவுமாறு மோடி வலியுறுத்தினார்.

தொடர்ந்து தற்போது ரஷ்ய அதிபர் புதினையும் போனில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியுள்ளார். அப்போது, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே நல்ல முடிவுகள் கிடைக்கும் என்று பிரதமர் மோடி ரஷ்ய அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க - பாகிஸ்தான் என்ன உங்கள் அடிமையா.. இந்தியாவிடம் இப்படி கூறுவீர்களா? மேற்கு நாடுகளுக்கு இம்ரான் கண்டனம்

கார்கிவ் நகரில் கர்நாடக மாணவர் ரஷ்ய படைகளால் சமீபத்தில் கொல்லப்பட்டார். இதுகுறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியர்களை பத்திரமாக வெளியேற்றுவதற்கு ரஷ்யா தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று புதினிடம் கேட்டுக் கொண்டார். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி