Home /News /international /

உக்ரைன் பிரிவினைவாத பகுதிகளின் சுதந்திரத்தை அங்கீகரித்தார் ரஷ்ய அதிபர் புதின்

உக்ரைன் பிரிவினைவாத பகுதிகளின் சுதந்திரத்தை அங்கீகரித்தார் ரஷ்ய அதிபர் புதின்

புதின்

புதின்

உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி மாகாணங்களை சுதந்திரம் உடைய பகுதிகளாக அங்கீகரித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். கிழக்கு உக்ரைனில் உள்ள பிரிவினைவாதப் பகுதிகளின் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் அதிபரின் ஆணையில் ரஷ்ய அதிபர் விளாமிடிர் புதின் கையெழுத்திட்டுள்ளார்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி மாகாணங்களை சுதந்திரம் உடைய பகுதிகளாக அங்கீகரித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். கிழக்கு உக்ரைனில் உள்ள பிரிவினைவாதப் பகுதிகளின் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் அதிபரின் ஆணையில் ரஷ்ய அதிபர் விளாமிடிர் புதின் கையெழுத்திட்டுள்ளார் - இது ரஷ்ய படையெடுப்பு அச்சத்தின் மத்தியில் மேற்கு நாடுகளுடன் கடுமையான பதட்டங்களைத் தூண்டும் தருணத்தில் இது நடந்துள்ளது.

    புதினின் அறிவிப்பு அதிபர்பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்திற்குப் பிறகு வந்துள்ளது. மாஸ்கோ ஆதரிக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக உக்ரேனியப் படைகளை மோதவிட்டு நீண்டகால மோதலாக இருந்து வரும் இந்த கிளர்ச்சிக்கு வெளிப்படையாக துருப்புக்கள் மற்றும் ஆயுதங்களை ரஷ்யா அனுப்பி வந்தது.

    2015 அமைதி ஒப்பந்தம் பெரிய அளவிலான சண்டையை முடிவுக்குக் கொண்டுவந்தது, ஆனால் பரந்த நெருக்கடிக்கு மத்தியில் மீண்டும் வன்முறை பரவியது மற்றும் சமீபத்திய வாரங்களில் இது அதிகரித்தது.

    ஒரு நீண்ட தொலைக்காட்சி உரையில், புதின் உக்ரைனை ரஷ்யாவின் வரலாற்றின் ஒருங்கிணைந்த பகுதியாக விவரித்தார், மேலும் கிழக்கு உக்ரைன் என்பது பண்டைய ரஷ்ய நிலங்கள்தான் என்றும் ரஷ்ய மக்கள் தனது முடிவை ஆதரிப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.

    இந்நிலையில், உக்ரைனுக்கு சொந்தமான டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய கிழக்கு மாகாணங்களில் ரஷ்ய ஆதரவு தலைவர்கள் தங்கள் மாகாணங்களை சுதந்திர நாடுகளாக அங்கீரிக்குமாறு விளாடிமிர் புதினை சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர். கோரிக்கைகளை தீவிரமாக பரிசீலிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.

    இந்த சூழலில் ரஷ்ய அதிபர் புதின், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மாகாணங்களை சுதந்திர நாடாக அங்கீகரித்தார்.

    இது தொடர்பாக கிரம்ளின் மாளிகையில் அவர் கூறிய போது, தற்போது உக்ரைன் நிர்வாகம் மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கிழக்கு உக்ரைன் விவகாரத்தில் சில கடினமான முடிவுகளை அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.

    புதினின் இந்த தனிச்சையான முடிவுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மெக்ரான், ஜெர்மன் அதிபர் ஸ்கோல்ஸ், ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பிரிவினைவாதப் பகுதிகளை அங்கீகரிக்க வேண்டாம் என்று மேற்கு நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க அதிபர் ஜோபைடன், தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தை அவசரமாக கூட்டி ஆலோசித்தார். இதில் உக்ரைன்- ரஷ்யா விவகாரத்தில் தற்போது ஏற்பட்டு சூழல், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Russia - Ukraine, Russia Putin

    அடுத்த செய்தி