ஹோம் /நியூஸ் /உலகம் /

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர பதவி - இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர பதவி - இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு

ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர பதவிக்கு இந்தியாவுக்கு ஆதரவு தரும் ரஷ்யா

ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர பதவிக்கு இந்தியாவுக்கு ஆதரவு தரும் ரஷ்யா

பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக தற்போது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நாடுகள் உள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaGenevaGeneva

  ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யா ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது. இதை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். உலகின் முக்கியத்துவம்  வாய்ந்த சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரமிக்க அங்கமாக கருதப்படுவது அதன் பாதுகாப்பு கவுன்சில்.

  கவுன்சிலின் சர்வதேச பாதுகாப்பு, ராணுவம், வெளியுறவு கொள்கை, அணு ஆயுத கொள்கை போன்றவற்றை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக பாதுகாப்பு கவுன்சில் விளங்குகிறது. இந்த பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நாடுகள் தற்போது உள்ளன.

  இந்நிலையில், பாதுகாப்பு கவுன்சின் நிரந்தர உறுப்பினர் பதவியை பெற இந்தியா சமீப காலமாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக உலக நாடுகளின் ஆதரவை திரட்டி வருகிறது. கடந்த வாரம் கூட நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு ஆதரவு தருவதாக அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. இந்நிலையில், தற்போது அமெரிக்காவுக்கு கொள்கை ரீதியாக எதிர் துருவத்தில் இருக்கும் ரஷ்யாவும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஐநா சபையின் 77ஆவது உச்சி மாநாட்டில் உரையாற்றிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ இதை கூறியுள்ளார். பாதுகாப்பு கவுன்சிலை ஜனநாயகப்படுத்த முக்கிய மாற்றங்கள் தேவை என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: வெற்று கோஷங்களால் கையில் இருக்கும் ரத்த கறைகளை மறைக்க முடியாது... பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் பதிலடி

  குறிப்பாக, இந்தியா, பிரேசில் போன்ற முன்னணி நாடுகளை நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என்றுள்ளார். தற்போதைய நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு தரும். அதேவேளை, சீனா மட்டும் இந்தியாவை நிரந்த உறுப்பினராக ஆக்குவதற்கு முட்டுக்கட்டை போட முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: India, Russia, United Nation