ஃஅநேட்டோவில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஸ்வீடன், ஃபின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்நாடுகளை ரஷ்யா எச்சரித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையே நீண்ட நாட்களாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோ படையிலும் சேர முடிவு செய்தது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு ஆபத்து நேரிடும் என்று எண்ணி ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து தாக்குதலை தொடங்கியது. 40 நாட்களுக்கும் மேலாக இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடன் நேட்டொவில் உறுப்பினராக ஜூன் மாதத்தில் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் ஃபின்லாந்தும் அதனை தொடர்ந்து ஸ்வீடனும் விண்ணப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரஷ்யாவின் சினத்தை அதிகரித்துள்ளது. ஃபின்லாந்து ரஷ்யாவுடன் 830 மைல் தூரத்திற்கு எல்லையை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு
மார்ச் மாதம், ரஷ்ய வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் பின்லாந்து அல்லது ஸ்வீடன் நேட்டோவில் சேர முயற்சித்தால் "தீவிரமான இராணுவ மற்றும் அரசியல் விளைவுகள்" ஏற்படும் என்று எச்சரித்திருந்தார். இந்நிலையில், தற்போது கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம், " இந்த கூட்டணி மோதலை நோக்கிய ஒரு கருவியாகவே உள்ளது" என்று கூறினார். மேலும், இது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்கும் கூட்டணி அல்ல, கூட்டணியை விரிவுபடுத்துவது நிச்சயமாக ஐரோப்பிய கண்டத்தில் அதிக ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: NATO Force, Russia - Ukraine