கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தி ஏவுகணை-ரஷ்யா சோதனை - உலகில் சிறந்தது என புடின் பெருமிதம்
கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தி ஏவுகணை-ரஷ்யா சோதனை - உலகில் சிறந்தது என புடின் பெருமிதம்
சர்மட் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பிளெசெட்ஸ்கில் சோதனையின் போது ஏவப்பட்டது
உக்ரைன் மீதான அதன் தாக்குதலுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ரஷ்யா ஒரு புதிய அணுசக்தி திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது, இது மாஸ்கோவின் எதிரிகளை நிறுத்தவும் சிந்திக்கவும் வைக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புதன்கிழமை கூறினார்.
உக்ரைன் மீதான அதன் தாக்குதலுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ரஷ்யா ஒரு புதிய அணுசக்தி திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது, இது மாஸ்கோவின் எதிரிகளை நிறுத்தவும் சிந்திக்கவும் வைக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புதன்கிழமை கூறினார்.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சர்மாட் ஏவுகணை, வடமேற்கு ரஷ்யாவில் உள்ள பிளெசெட்ஸ்கில் இருந்து முதன்முறையாக சோதனை செய்யப்பட்டதாகவும், கிட்டத்தட்ட 6,000 கிமீ (3,700 மைல்கள்) தொலைவில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கியதாகவும் அதிபர் புடினுக்கு ராணுவம் தொலைக்காட்சியில் காட்டியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
சர்மாட் அணுசக்தி ஏவுகணை சோதனை, பல ஆண்டுகளாக ஏற்பாட்டில் இருந்துள்ளது, அதனால் மேற்கு நாடுகளை இந்தச் சோதனை ஆச்சரியப்படுத்தவில்லை, ஆனால் தீவிர புவிசார் அரசியல் பதற்றத்தின் தருணத்தில் வந்ததுதான் கவலையை அதிகரித்துள்ளது. பிப்ரவரியில் உக்ரைனுக்குள் பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை அனுப்பியதிலிருந்து ரஷ்யா இதுவரை எந்த முக்கிய நகரங்களையும் கைப்பற்றவில்லை.
இந்நிலையில் சர்மாட் அணுசக்தி ஏவுகணை குறித்து அதிபர் புடின் கூறும்போது, “புதிய அணுசக்தி ஏவுகணை மிக உயர்ந்த தந்திரோபாய மற்றும் தொழில்நுட்ப பண்புகளைக் கொண்டுள்ளது மேலும் எந்த ஒரு ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளும் இதை ஒன்றும் செய்ய முடியாது. நவீன வழிமுறைகளையும் சமாளிக்கும் திறன் கொண்டது. இந்த சர்மாட் ஏவுகணைக்கு ஈடு இணை உலகில் எதுவும் இல்லை, இனியும் வரப்போவதுமில்லை” என்று பெருமிதம் பொங்கக் கூறியுள்ளார் புடின்.
மேலும் புடின் கூறும்போது, “இந்த உண்மையான தனித்துவமான ஆயுதம் நமது ஆயுதப் படைகளின் போர் திறனை வலுப்படுத்தும், வெளிப்புற அச்சுறுத்தல்களிலிருந்து ரஷ்யாவின் பாதுகாப்பை நம்பகத்தன்மையுடன் உறுதி செய்யும் மற்றும் ரஷ்ய எதிர்ப்பின் வெறித்தனமான பேச்சுக்களினால் நம் நாட்டை அச்சுறுத்த முயற்சிப்பவர்களை இது எச்சரிக்கை செய்கிறது” என்றார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.