உக்ரைன் போரின் எதிரொலியாக ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கியது. இந்தப் போரில் உக்ரைனின் மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்யப் படையினர் தாக்குதல் நடத்தினர். புச்சா நகர வீதிகளில், கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் ஏராளமான சடலங்கள் கிடந்த. இதன் வீடியோ வெளியாகி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ரஷ்ய படைகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதால் அந்நாட்டை ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து நீக்க வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், தீர்மானத்திற்கு 93 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 24 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியா உள்ளிட்ட 58 நாடுகள் வாக்களிக்கவில்லை.
3-ல் 2 பங்கு வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாக பதிவானதை தொடர்ந்து மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு 32 ஆண்டு சிறை தண்டனை - பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் இந்த நடவடிக்கைக்கு உக்ரைன் நன்றி தெரிவித்துள்ளது. போர்க்குற்றவாளிகளுக்கு, மனித உரிமைகளைப் பேணும் . அங்கங்களில் இடம் கிடையாது என உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரி குலேபா கூறியுள்ளார்.
இடைநீக்கம் வருத்தமளிப்பதாக கூறியுள்ள ரஷ்யா, இதனை எதிர்த்து சட்டபூர்வமாகப் போராடுவோம் என தெரிவித்துள்ளது. இதனிடையே ரஷ்ய துருப்புகள் கடுமையான இழப்பை சந்தித்துள்ளதாக கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார். இதனை மிகப்பெரிய சோகம் என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
ரஷ்யப் படைகள் ஊடுருவலுக்குப் பிறகு துறைமுக நகரான மரியுபோலில் ஐந்தாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்டவர்களில் 210 குழந்தைகளும் அடங்குவர். தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கி, கிழக்கு பகுதியான டான்பாஸில் கவனம் செலுத்த மீண்டும் ஒருங்கிணைத்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
டான்பாஸில் உள்ள நகரங்கள் மீது இரவு நேரத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தாக்குதலுக்கு அஞ்சி மக்கள் குடியிருப்புகளின் அடித்தளங்களில் பதுங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.