ஹோம் /நியூஸ் /உலகம் /

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா திடீர் ஏவுகணை தாக்குதல்... முக்கிய கட்டிடங்கள் தரைமட்டம்

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா திடீர் ஏவுகணை தாக்குதல்... முக்கிய கட்டிடங்கள் தரைமட்டம்

கீவ்

கீவ்

உக்ரைன் தலைநகர் கீவ்வில் இன்று காலை ரஷ்யா திடீரென்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. பல இடங்களில் குண்டுகள் தாக்கியுள்ள நிலையில் கீவ் நகரத்தில் பதற்றம் நிலவுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • intern, IndiaKyivKyiv

  ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கு இடையே கடந்த 8 மாதங்களாகவே போர் நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா ஆக்கிரமித்த கிரிமியாவில் சில தினங்களுக்கு முன்பு கெர்ச் பாலத்தில் நடந்த வெடி விபத்தை ஒட்டி ரஷ்யா - உக்ரைன் இடையே பதற்றம் அதிகரித்தது.

  இன்று காலை திடீரென ரஷ்யா, உக்ரைன் தலைநகர் கீவ்வில் ஏவுகணைகளை ஏவியுள்ளது. இதனால் பல இடங்களில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. கீவ்வில் முக்கிய பகுதியில் தொடர்ந்து இரண்டும் முறை வெடிச் சத்தம் கேட்கப்பட்டுள்ளது.

  கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ இது குறித்துத் தெரிவிக்கையில் ஷெவ்செங்கோ பகுதியில் வெடி குண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும் நகரின் முக்கிய கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் தரைமட்டமாகத் தகர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

  Also Read : கெர்ச் பாலத்தில் தீ விபத்து : ’இப்படித்தான் நடக்கும்...’ - ரஷ்யாவை சாடிய உக்ரைன்!

  மேலும் கீவ் தேசிய கல்லூரி அருகில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதால் பாதிதிப்புகள் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தாக்குதலில் பல பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை இன்னும் தெரிவிக்கப்படவில்லை. நகரமே புகை மண்டலமாகக் காணப்படும் நிலையில் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி முழு விச்சில் நடைபெற்று வருகிறது.

  Published by:Janvi
  First published:

  Tags: Russia, Russia - Ukraine