முகப்பு /செய்தி /உலகம் / உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரிப்பு!

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரிப்பு!

தாக்கப்பட்ட பகுதிகள்

தாக்கப்பட்ட பகுதிகள்

ரஷ்யா திடீரென்று உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

  • Last Updated :
  • interna, IndiaKyivKyivKyiv

கிரிமியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் ஒரே பாலமான கெர்ச், கடந்த சனிக்கிழமை தகர்க்கப்பட்டது. அதில் 3 பேர் உயிரிழந்தனர். இச்செயலைப் பயங்கரவாதம் என்றும், அதற்கு உக்ரைனின் உளவுத்துறை அதிகாரிகளே பொறுப்பு என்றும் ரஷ்ய அதிபர் புதின் குற்றம்சாட்டி வருகிறார்.

பாலத்தின் மீதான தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திங்கள்கிழமை காலை, திடீரென ரஷ்யா, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.மொத்தம் 75 முறை ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் நாட்டு ராணுவ தளபதி வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார்.

கீவ்- வின் ஷெவ்செங்கோ பகுதியில் பல முக்கிய கட்டடங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் தரைமட்டமாகவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல்களில் மொத்தமாக 8 பேர் பலியானதாகவும், பல இடங்களில் கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதுவரை கிடைத்த தகவலின் படி சுமார் 11 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பயந்து கீவ் நகர மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அங்கிருந்தபடி அவர்கள் பாடல் பாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Also Read : உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா திடீர் ஏவுகணை தாக்குதல்... முக்கிய கட்டிடங்கள் தரைமட்டம்

ஏவுகணை தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா தங்களை உலகத்தை விட்டே துடைத்தெறியத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் ஷாஹெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்துவதாகவும். எரிசக்தி மையங்கள் மற்றும் மக்களைக் குறி வைத்துத் தாக்குவதாகவும் கூறியுள்ளார்.உக்ரைனில் ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் மால்டோவாவின் வான்வெளியைக் கடந்ததாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கம் அளிக்க ரஷ்யா தூதருக்கு மால்டோவா உத்தரவிட்டுள்ளது.

First published:

Tags: Russia, Russia - Ukraine