முகப்பு /செய்தி /உலகம் / உக்ரைனுக்கு உதவியதால் நெருக்கடியில் போலாந்து... கச்சா எண்ணெய் சப்ளையை நிறுத்தி அதிர்ச்சியளித்த ரஷ்யா..!

உக்ரைனுக்கு உதவியதால் நெருக்கடியில் போலாந்து... கச்சா எண்ணெய் சப்ளையை நிறுத்தி அதிர்ச்சியளித்த ரஷ்யா..!

போலாந்திற்கு செக் வைத்த ரஷ்யா

போலாந்திற்கு செக் வைத்த ரஷ்யா

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஏற்கனவே 4 ராணுவ டாங்கிகளை அனுப்பி வைத்துள்ளதாக போலந்து பிரதமர் மெடூசி மொரவிஹி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaRussiaRussia

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்து, 370வது நாளை நெருங்கியுள்ளது. இந்த போரில், இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், ஏராளமான பொதுமக்களும் உயிரிழந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு தேவையான பல உதவிகளை செய்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கி வரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்து, போரை நிறுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் நாடுகள் போரை கைவிட்டு, அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

இதனிடையே, ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஏற்கனவே 4 ராணுவ டாங்கிகளை அனுப்பி வைத்துள்ளதாகவும், மேலும் ஆயுதங்களை விரைவில் வழங்க உள்ளதாகவும் போலந்து பிரதமர் மெடூசி மொரவிஹி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார். அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன் போலந்துக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அங்கிருந்து ரகசியமாக, ரயில் மூலம் உக்ரைன் தலைநகர் கீவுக்கு சென்றது, உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், போலந்திற்கு வழங்கி வந்த கச்சா எண்ணெய் விநியோகத்தை ரஷ்யா அதிரடியாக நிறுத்தி, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. போலந்து நாட்டிற்கு பைப் லைன் வழியாக விநியோகிக்கப்பட்டு வந்த கச்சா எண்ணெய் விநியோகத்தை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக போலந்து எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. போரில் உக்ரைனுக்கு ராணுவ டாங்கி வழங்கியதற்கு பதிலடியாக போலந்திற்கு கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியுள்ளது. ரஷ்யாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் போலந்தில் கச்சா எண்ணெய் விலை உயரும் என கூறப்படுகிறது.

First published:

Tags: Crude oil, Poland, Russia, Russia - Ukraine