Home /News /international /

பொருளாதாரத் தடை விதித்த ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யா நடவடிக்கை

பொருளாதாரத் தடை விதித்த ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யா நடவடிக்கை

ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்ய அதிபர் புதின்

ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யா எதிர்நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

    ரஷ்யாவை ஒட்டிய நாடான உக்ரைனின் மீது கடந்த சில தினங்களுக்கு முன்னர் போர் தொடுத்தது ரஷ்யா. ரஷ்யாவின் பெரும்படைக்கு எதிராக சிறிய நாடான உக்ரைனும் தொடர்ந்து போரிட்டுவருகிறது. ரஷ்யாவின் படைகளை சமாளிக்க உலக நாடுகள் உதவி செய்யவேண்டும் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தொடர்ந்து கோரிக்கைவைத்துவருகிறது. இருப்பினும், எந்த உலக நாடும் ராணுவ உதவி அளிப்பதற்கு தயாராக இல்லை. மாறாக ரஷ்யாவுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன.

    மேலும், ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத்தடைகளை விதித்துவருகின்றன. ரஷ்யாவின் மீது பல்வேறு பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், போர் நடவடிக்கையிலிருந்து ரஷ்யா சிறிதும் பின்வாங்கவில்லை. குறிப்பாக போர் நடவடிக்கையை தீவிரப்படுத்திவருகிறது. இந்தநிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான நடவடிக்கையை ரஷ்யாவும் தொடர்ந்துள்ளது. ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காஸ்மோஸ் இதை அறிவித்துள்ளது.

    தென்அமெரிக்காவின் ப்ரெஞ்ச் கயானாவில் இருந்து ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட்டுகள் மூலம் ஐரோப்பிய நாடுகளின் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் ஏவப்படுவது வழக்கம். கடந்த 10ஆம் தேதிதான் கடைசியாக சோயுஸ் ராக்கெட்டுகள் மூலம் ஐரோப்பிய நாடுகளின் 30 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.

    அணு ஆயுத படையை தயார் நிலையில் இருக்க உத்தரவிட்ட புதின் - அச்சத்தில் உலக நாடுகள்

    அமெரிக்காவின் நாசா, ஐரோப்பாவின் இஎஸ்ஏ ஆகிய விண்வெளி ஆராய்ச்சி மையங்களுடன் நெருக்கமாக ரஷ்யா பணியாற்றி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்ததால், ஐரோப்பிய நாடுகளின் செயற்கைக்கோள்களை ஏவும் திட்டங்களை ராஸ்காஸ்மோஸ் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Russia - Ukraine

    அடுத்த செய்தி