Home /News /international /

ஸ்புட்னிக் தடுப்பூசி ஒமைக்ரான் வைரஸ்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் - ரஷ்யா

ஸ்புட்னிக் தடுப்பூசி ஒமைக்ரான் வைரஸ்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் - ரஷ்யா

ஒமிக்ரான் வைரஸ்

ஒமிக்ரான் வைரஸ்

ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஒமைக்ரான் கொரோனா வகை வைரஸை அழிக்கும் தன்மை கொண்டது என்று ரஷ்யா கூறியுள்ளது.

    ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஒமைக்ரான் கொரோனா வகைக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று ரஷ்ய சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் கொரோனா வகை வைரஸ், உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய சுகாதாரத்துறை, ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஒமைக்ரான் கொரோனா வகை வைரஸை அழிக்கும் தன்மை கொண்டது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    மேலும், கொரோனா வகை வைரசில், எத்தகைய திரிபுகள் ஏற்பட்டாலும், அவற்றை எதிர்கொள்ளும் திறன்வாய்ந்தவை ஸ்புட்னிக் தடுப்பூசி என்றும், தேவைப்பட்டால் லட்சக்கணக்கான பூஸ்டர் தடுப்பூசிகளை தயாரிக்கவிருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஒமைக்ரான் கொரோனா திரிபு கவலையளித்தாலும், யாரும் அச்சப்பட வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருந்து வருகிறது. இந்நிலையில் பேசிய அதிபர் ஜோ பைடன், ஒமைக்ரான் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான விரிவான செயல்திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்றார். ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் இல்லாமலேயே, பூஸ்டர் தடுப்பூசி மற்றும் கூடுதல் பரிசோதனைகள் மூலமே தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் பைடன் கூறியுள்ளார்.

    இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து சண்டிகர் திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனைதொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்து இருவருக்கும் நோய் தொற்று பரவியுள்ளது. அவர்களது பரிசோதனை மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    இதேபோல, தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, விமான நிலையம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது. பெங்களூருவில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இரண்டு தென்னாப்பிரிக்கர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    அவர்களின் பரிசோதனை மாதிரிகள் அடுத்தகட்ட ஆய்வுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், விமான நிலையத்தில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் கொரோனா நெகடிவ் சான்று சரிபார்க்கப்படுகிறது.

    Must Read : தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல்

    இந்நிலையில், புதிய வகை உருமாற்ற கொரோனாவான ஓமைக்ரான் உலகளவில் மிக அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார மையம் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்து.
    Published by:Suresh V
    First published:

    Tags: Corona Vaccine, Omicron, Russia

    அடுத்த செய்தி