Home /News /international /

ரஷ்யா மீது தடை விதிப்பதா? உலக அளவில் உணவு பொருள்களின் விலை கடுமையாக அதிகரிக்கும்: அதிபர் புதின் எச்சரிக்கை

ரஷ்யா மீது தடை விதிப்பதா? உலக அளவில் உணவு பொருள்களின் விலை கடுமையாக அதிகரிக்கும்: அதிபர் புதின் எச்சரிக்கை

ரஷ்ய அதிபர் புடின்

ரஷ்ய அதிபர் புடின்

பேஸ்புக், டுவிட்டர், டிக் டாக், அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய சேவைகளை ரஷியாவில் நிறுத்தி வைத்துள்ளன.

    ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகளால் , உலக அளவில் உணவு பொருள்களின் விலை கடுமையாக அதிகரிக்கும் என அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை கண்டித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

    அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷியாவில் தங்களுடையை சேவையை நிறுத்தி உள்ளன.

    பேஸ்புக், டுவிட்டர், டிக் டாக், அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய சேவைகளை ரஷியாவில் நிறுத்தி வைத்துள்ளன. இதேபோல், ஷெல், ஆப்பிள், டிஸ்னி, ஸ்டார்பக்ஸ், மெக்டொனால்ட்ஸ், ஹிட்டாச்சி மற்றும் ஐகியா ஆகியவையும் ரஷ்யாவில் தங்களது வர்த்தகத்தை தொடரப்போவதில்லை என அறிவித்துள்ளன.

    இந்த நிலையில் பிரபல ஜப்பானிய கேமிங் ஜாம்பவான்களான சோனி மற்றும் நிண்டெண்டோ ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தி கொண்டன.

    ப்ளேஸ்டேஷன் 5 இன் உற்பத்தியாளரான சோனி , "கிரான் டூரிஸ்மோ 7" ரேசிங் கேம் ரஷ்யாவில் வெளியிடப்படாது என்றும் பிளே ஸ்டேஷன் ஸ்டோரின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்துள்ளது.

    Also Read: உக்ரைனில் குண்டு மழை பொழியும் ரஷ்யா - மரியுபோல் நகரில் கொல்லப்பட்ட 1,300 அப்பாவி பொதுமக்கள்

    மேலும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் வருகிற நாட்களில் அதனுடைய செயல்பாடுகளை நிறுத்தும் என்று தெரிவித்துள்ளது. ஏற்கெனவே வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த 'தி பேட்மேன்' திரைப்படத்தை ரஷியாவில் வெளியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. பிப்ரவரி 24- ஆம் தேதி முதல் 330 நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளன.

    மேற்கத்திய நாடுகளின் தடைகள் குறித்தும் கார்பரேட் நிறுவனங்களின் வெளியேற்றம் குறித்தும் அதிபர் புதின் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மேற்கத்திய நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யா, உர ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக உலக அளவில் உணவு பொருள்களின் விலை கடுமையாக அதிகரிக்கும் என அதிபர் புதின் எச்சரித்துள்ளார்.

    தொலைத்தொடர்பு, மருத்துவம், வாகனம், விவசாயம், மின்சாரம் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் உள்ளிட்ட 200 பொருள்களின் ஏற்றுமதிக்கு 2022 இறுதி வரை ரஷ்யா தடை விதித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள தங்கள் நிறுவனங்களை மூட முடிவு செய்தால், "வெளிப்புற" நிர்வாகத்தை அறிமுகப்படுத்தும் சட்டத்தை கொண்டு வர புதின் அரசு தீர்மானித்துள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Russia, Russia - Ukraine

    அடுத்த செய்தி