Russia-Ukraine: ரஷ்யா குறித்து இந்தியாவுடன் ஆலோசிக்கிறோம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
Russia-Ukraine: ரஷ்யா குறித்து இந்தியாவுடன் ஆலோசிக்கிறோம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
இந்தியா பொதுவாக அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுடன் நட்புறவையே பேணி வருகிறது, இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைனுக்கு ஆதரவான அமெரிக்க நிலைப்பாடு இந்தியாவை முறுக்குக் கயிறின் மேல் நடக்கும் நிலைமைக்குத் தள்ளியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பிறகே அமெரிக்கா, இந்தியாவுடன் ஆலோசனை செய்து வருவதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜோ பைடன் நிருபரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், “நாங்கள் இன்று இந்தியாவுடன் ஆலோசனையில் இருந்தோம். நாங்கள் அதை முழுமையாகத் தீர்க்கவில்லை,” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி வியாழன் அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசி, "உடனடியாக வன்முறையை நிறுத்த வேண்டும்" மற்றும் அனைத்து தரப்பிலிருந்தும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் உட்பட இந்தியா தயங்குகிறது.
ரஷ்யாவிடம் இருந்து 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, S-400 Triumf ஐ இந்தியா வாங்கியது மற்றும் அமெரிக்க பொருளாதாரத் தடைகளை ஈர்க்கும் அபாயத்தில் உள்ளது - ரஷ்யா உக்ரைனை தாக்குவதற்கு முன்பு இருந்ததை விட இப்போது பொருளாதாரத் தடை வாய்ப்பு அதிகம்.
வியாழன் அன்று ரஷ்யா மீது கூடுதல் தடைகளை அறிவித்தார் அமெரிக்க அதிபர் பைடன்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.